Showing posts with label நாரதர். Show all posts
Showing posts with label நாரதர். Show all posts

Monday, 20 December 2021

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67

(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)

Paundraka Narada Conversation | Bhavishya-Parva-Chapter-67 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்...

Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

Saturday, 13 March 2021

வருணனுடன் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 186 – 130

(அநிருத்தஸ்ய நாகபாஷமோசநம் க்ருஷ்ணஸ்ய வருணாலயகமநம் வருணேந ஸஹ யுத்தம் த்வாரகாப்ரத்யாகமநம் ச)

Krishna finds Aniruddha; gives the kingdom to Kumbhanda and fights with Varuna for cows | Vishnu-Parva-Chapter-186-130 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாகபாசத்தில் இருந்து விடுபட்ட அநிருத்தன்; உஷை அநிருத்தன் திருமணம்; கும்பாண்டன் நாட்டைப் பெற்றது; பசுக்களின் நிமித்தம் வருணனோடு நடந்த போர்...


Lord Krishna And Cows

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு பல வரங்களைப் பெற்றதில் பாணன் பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன், மஹாகாலன் என்ற உயர்நிலையை அடைந்ததும் ருத்ரனுடன் சென்றான்.(1)

Monday, 1 March 2021

அநிருத்தனுக்கான கவலையில் யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 178 – 122

(ஷ்ருதஹ்ருதாநிருத்தபாஷபந்தநஸ்ய க்ருஷ்ணஸ்ய ஷோணிதபுரகமநம்)

Anxiety of the yadavas for Aniruddha | Vishnu-Parva-Chapter-178-122 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகையில் பெண்களின் ஓலம்; அநிருத்தனைத் தேடிச் சென்ற ஒற்றர்கள்; கிருஷ்ணனைத் துதித்த கருடன்; பாணனோடு போர்புரியச் சென்ற கிருஷ்ணன்...


Krishna and yadavas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அநிருத்தன் பணயக் கைதியான போது, அவனது அன்புக்குரிய மனைவியரும், தோழியரும், அவனில்லாமல் அன்றில் பறவைகளைப் போல அங்கே {துவாரகையில்} அழுது கொணிடருந்தனர்.(1) {அவர்கள்}, "ஐயோ, தலைவர் கிருஷ்ணரின் பாதுகாப்பிலும் நாங்கள் அச்சத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் அழுது கொண்டிருக்கிறோம்.(2) எவருடைய தோள்களின் நிழலில் ஆதித்யர்கள், மருத்துகள், இந்திரனின் தலைமையிலான தேவர்கள் ஆகியோரும் தேவலோகத்தில் கவலையில்லாமல் வாழ்கின்றனரோ அவருக்கே இவ்வுலகில் இத்தகைய பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஐயோ, அவரது வீரப் பேரனான அநிருத்தனை அபகரித்துச் சென்றவன் எவன்?(3,4) ஐயோ, தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கும் வாசுதேவரின் கோபமெனும் நெருப்பைத் தூண்டிய அந்தத் தீய மனம் படைத்தவன், இவ்வுலகில் நிச்சயம் அச்சமற்றவனே.(5) அவன், வாயை அகலமாகத் திறந்திருக்கும் யமனுடைய பற்களின் முன் நிற்கிறான். உண்மையில் அத்தகையே பகைவனாலேயே வாசுதேவனின் முன்பு போரில் நிற்க இயலும். சச்சியின் தலைவனாகவே {இந்திரனாகவே} இருந்தாலும், யது மன்னனான கேசவனுக்கு இத்தகைய தீங்கை இழைத்துவிட்டு உயிரோடு தப்ப முடியுமா?(6,7) ஐயோ, இன்று எங்கள் கணவர் அபகரிக்கப்பட்டாரோ, எங்கள் தலைவன் எங்களைக் கைவிட்டு எங்களைப் பரிதாபத்திற்குரியோர் ஆக்கினாரோ. ஓ! எங்கள் தலைவனின் பிரிவால் நாங்கள் யமனின் வசத்தை அடைந்திருக்கிறோம்" என்று சொல்லி அழுதனர்.(8)

Thursday, 28 January 2021

நாரதர் சொன்ன கிருஷ்ணனின் மகிமை | விஷ்ணு பர்வம் பகுதி – 167 – 111

(தந்யோபாக்யாநம்)

Narada puts questions: And th mystery is explained | Vishnu-Parva-Chapter-167-111 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகையில் பலநாட்டு மன்னர்களின் முன்னிலையில் கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன நாரதர்...


Narada recites Krishna's glory

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தன் அழிவைத் தானே விரும்பிய சம்பரனால் பிரத்யும்னன் அபகரிக்கப்பட்ட அதே மாதத்தில் ஜாம்பவதி சாம்பனைப் பெற்றாள்.(1) அவன் {சாம்பன்} தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து பலராமனால் ஆயுதப் பயன்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டான். பிற விருஷ்ணிகள் அவனை ராமனுக்குச் சற்றே குறைந்தவனாகக் கருதி மதித்து வந்தனர்.(2) அவன் {சாம்பன்} பிறந்ததிலிருந்து கிருஷ்ணன், பகைவர்களற்றவனாகவும், பகை மன்னர்கள் யாரும் அற்றவனாகவும் நந்தனத் தோட்டத்தில் வாழும் தேவர்களைப் போலத் தன்னுடைய தலைநகரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.(3) அந்த நேரத்தில் ஜனார்த்தனனின் மீது கொண்ட அச்சத்தால் பகை மன்னர்களால் அமைதியாக இன்புற்றிருக்க முடியவில்லை; யாதவர்களின் செழிப்பைக் கண்ட வாசவனும் கூடத் தன் வளங்களைத் தானே விரும்பாதிருந்தான்.(4)

Wednesday, 20 January 2021

சம்பர வதங்குறித்த நாரதர் சொல் | விஷ்ணு பர்வம் பகுதி – 163 – 107

(ஷம்பரவதே நாரதவாக்யம்)

Shamvara comes to the battle-field | Vishnu-Parva-Chapter-163-107 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சம்பராசுரனுக்கும் பிரத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு...


War between Asura Shamvara and Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, அப்போது கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் தன் தேரோட்டியிடம், "ஓ! வீரா, விரைவில் என் தேரை பகைவனிடம் {பிரத்யும்னனிடம்} கொண்டு செல்வாயாக.(1) எனக்குத் தீங்கிழைத்தவனைக் கணைகளால் நான் கொல்லப் போகிறேன்" என்றான்.

Tuesday, 29 December 2020

கிருஷ்ணனின் மகிமை | விஷ்ணு பர்வம் பகுதி – 159 – 103

(கிருஷ்ணஸ்துதி)

The same subject continued | Vishnu-Parva-Chapter-159-103 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெருமைகளை முழுமையாகவும், விரிவாகவும் சொன்ன நாரதர்...


Yashoda and Krishna

நாரதர் {உக்ரசேனனிடமும், யாதவர்களிடமும்}, "முரனின் {முருவின்} பாசக்கயிறுகள் அறுக்கப்பட்டன, நிசும்பனும், நரகனும் கொல்லப்பட்டனர், பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் சாலை ஆபத்துகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டது.(1) செருக்குமிக்க உலக மன்னர்களும் கூட இந்தச் சூர குல வழித்தோன்றலுடைய (கிருஷ்ணனது) வில்லின் நாணொலியையும், பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும் கேட்டுப் போரில் அச்சமடைந்தனர்.(2) விருஷ்ணிகளில் முதன்மையான இந்தக் கேசவன், தக்காண {தென்னகத்தைச் சேர்ந்த} தேர் வீர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ருக்மியை எளிதில் வீழ்த்தி ருக்மிணியை அபகரித்துச் சென்றான்.(3) சங்கு சக்கரக் கதாதாரியான இந்த ஹரி, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், மேக முழத்தைப் போன்ற சடசடப்பொலியை உண்டாக்குவதுமான தேரில் போஜனின் மகளை {பீஷ்மகனின் மகளான ருக்மிணியைத்} தன் வீட்டிற்குக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொண்டான்.(4)

Saturday, 26 December 2020

கிருஷ்ணனின் வல்லமை | விஷ்ணு பர்வம் பகுதி – 158 – 102

(கிருஷ்ணஸ்ய ஸபாப்ரவேஷம்)

Krishna invites a meeting of his kinsmen | Vishnu-Parva-Chapter-151-101 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவகியின் மகளான ஏகாநம்ச மாயையின் பெருமை; கிருஷ்ணனின் குழந்தைப்பருவ விளையாட்டுகளையும், அவன் செய்த தீரச் செயல்களையும் முற்றாகக் கூறிய நாரதர்...


Krishnas feat

கிருஷ்ணன் {யாதவர்களிடம்}, "அறம் சார்ந்த யாதவர்களே, உங்கள் தவச சக்தியாலும், மனங்குவிந்த ஓர்மையினாலும், பூமியின் மகனான நரகன் செய்த பாவத்தாலும் அவன் கொல்லப்பட்டான்.(1) அழகிய கன்னிகையர் பலர் அவனது அந்தப்புரத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர், மணி மலையின் சிகரம் பெயர்த்தெடுக்கப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டது.(2) என்னுடைய பணியாட்களும் {கின்னரர்கள்} இந்தச் செல்வத்திரளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இப்போது நீங்களே இவை யாவற்றுக்கும் உரிமையாளர்கள்" என்றான்.(3)

Sunday, 29 November 2020

சாலிக்ய காந்தர்வம் | விஷ்ணு பர்வம் பகுதி – 146 – 090

(சா²லிக்யக்ரீடா³)

The sport of Yadavas continued | Vishnu-Parva-Chapter-146-090 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நீர் விளையாட்டுத் தொடர்ந்தது; கிருஷ்ணனும், பலராமனும் இரு தரப்பாகப் பிரிந்து விளையாடியது; அவர்களுடன் இணைந்து கொண்ட அர்ஜுனன்; சாலிக்ய காந்தர்வமெனும் தெய்வீகப் பாடல்...


Krishna and his family

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சந்தனம் பூசிய பெருங்கரங்களைக் கொண்ட பேரழகன் பலன் {பலராமன்}, காதம்பரி மது உண்டு தன் மீதும், தன் உடல் இயக்கத்தின் மீதுமான கட்டுப்பாட்டை இழந்து கண்கள் சிவந்தவனாக ரேவதியுடன் விளையாடத் தொடங்கினான்.(1) சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான தெய்வீக ராமன், மேகத்துக்கு ஒப்பான கருவண்ண ஆடை உடுத்தி, போதையில் கண்கள் உருள மேகத்தில் ஒளிரும் முழு நிலவைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(2) அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இடது காதில் மட்டும் குண்டலம் கொண்டவனுமான ராமன், புன்னகைத்தபடியே சாய்வுப்பார்வையில் தன் அன்புக்குரிய துணைவியின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(3)

Monday, 23 November 2020

அந்தகாசுரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 143 – 087

(அந்தகவதம்)

The history of the Asura Andhaka: They fight again | Vishnu-Parva-Chapter-143-087 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அந்தகாசுரன் பிறப்பு; முனிவர்களின் கவலை; மந்தார வனத்தின் பெருமையை அந்தகனிடம் சொன்ன நாரதர்...

Lord Shiva in forest

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஓ! வைசம்பாயனரே, ஷட்புரம் அழிந்த கதையை நான் கேட்டேன். நீர் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தகனின் அழிவை இப்போது சொல்வீராக.(1) ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், அப்போது நேர்ந்த நிகும்பனின் அழிவையும் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான்.(2)

Tuesday, 17 November 2020

அதிதி, சாவித்ரி, கங்கா, யாம விரதங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 138 – 082

(உமாவ்ரதகதநஸமாப்தி꞉)

Narada gives a history of vratas performed by other ladies | Vishnu-Parva-Chapter-138-082 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : உமை சொன்ன விரத விளக்கம் முடிவு; தேவதைகள் செய்த சாவித்ரி, அதிதி, கங்கா, யாம விரதங்கள்; கிருஷ்ணனின் மனைவிமாரான ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோர் செய்த விரதங்கள்...

Vishnu darshan to Aditi

உமை {அருந்ததியிடம்}, "திறன்மிக்க நண்பர்களையும், உறவினர்களையும் பெற விரும்பும் கற்புள்ள ஒரு பெண், ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு சப்தமியிலும் {வளர்பிறை ஏழாம் நாள், தேய்பிறை ஏழாம் நாள் ஆகியவற்றில்} உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(1) ஓராண்டு நிறைவடைந்ததும், பணக்கொடையுடன் சேர்த்து தங்கத்தாலான ஒரு மரத்தையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். அப்போது அவள் அறம்சார்ந்த நண்பர்களையும், உறவினர்களையும் பெறுவாள்.(2)

Saturday, 7 November 2020

புண்யக நோன்பின் வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078

(புந்யாகவிதி)

The history of the Punyaka rite | Vishnu-Parva-Chapter-134-078 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பின் வரலாறு குறித்து நாரதரிடம் கேட்ட ருக்மிணி; புண்யக நோன்பின் விதி குறித்து உமையிடம் கேட்ட அருந்ததி...

Narada Rukmini Satyabama Krishna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நீர் அனைத்தையும் எனக்குச் சொன்னீர். எனவே, புண்யக அறச்சடங்கின் தோற்றம் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

புண்யகச் சடங்கைச் செய்த சத்யபமா | விஷ்ணு பர்வம் பகுதி – 133 – 077

(த்யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தாநே நயநம்)

Satya perform the rite | Vishnu-Parva-Chapter-133-077 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சத்யபாமையின் புண்யக நோன்பு; நாரதருக்குக் கொடையளித்துத் தன்னை மீட்டுக் கொண்ட கிருஷ்ணன்; பாரிஜாதத்தை மீண்டும் சொர்க்கத்திற்குக் கொண்டு சென்றது...

Narada Rukmini Satyabama Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருவின் வழித்தோன்றலே, முனிவர்களிலும், பேசுபவர்களிலும் முதன்மையானவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான நாரதர், கிருஷ்ணனால் நினைக்கப்பட்டவுடனேயே அங்கே வந்தார்.(1) ஓ! மன்னா, ஸ்ரீயின் அழகிய தலைவன் முறையாக அவரை வழிபட்டு, புண்யகச் சடங்குகளை ஏற்றுக்கொள்ளுமாறு மதிப்புடன் அழைத்தான்.(2) 

Monday, 19 October 2020

நாரதரின் அறிவுரை | விஷ்ணு பர்வம் பகுதி – 128 – 072

(ஶக்ரநிஶ்சயகதநார்தம் நாரதஸ்ய த்வாரகாம் ப்ரதி கமநம்)

Narada's advice | Vishnu-Parva-Chapter-128-072 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன நாரதர்; பாரிஜாதம் கொடுக்க மீண்டும் மறுத்த இந்திரன்...

Narada advises Indra


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையானவரான நாரதர், மஹேந்திரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களின் மன்னனிடம் கமுக்கமாக இந்தச் சொற்களைச் சொன்னார்.(1) நாரதர், "ஏற்புடையவை மட்டுமே மன்னர்களிடம் சொல்லப்பட வேண்டும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. ஆனால் வாய்ப்பேற்படும் தருணங்களில் ஏற்பில்லாதவையாக இருப்பினும், அவர்களுக்கு நன்மை விளைவிக்கும் சொற்களும் சொல்லப்பட வேண்டும்.(2) அனுமதியில்லாமல் மன்னனின் முன்பு தோன்றுவதும் முறையாகாது என முனிவர்கள்[1] சொல்கின்றனர்.(3) ஆனால், நீ எப்போதும் காரியங்களில் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் என் அறிவுரையை நாடுபவன் என்பதால் இன்று உன்னால் வேண்டப்படாதவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், நீ விரும்பினால் அதை ஏற்றுக்கொள்வாயாக.(4) நண்பர்கள், அதிலும் குறிப்பாகத் தங்கள் நண்பர்கள் வீழ்வதைக் காண விரும்பாத நண்பர்கள், தாங்கள் அழைக்கப்படாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கேற்ற நியாயமான நல்ல ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.(5) ஒருவனுக்கு ஏற்பில்லாததாக, இனிமையற்றதாக இருப்பினும் அவனது நலனுக்கு உகந்ததையே எப்போதும் அறம் சார்ந்த நன்மக்கள் பேச வேண்டும். அன்புக்கடனில் இருந்து விடுபடுவதற்கான வழி இதுவெனக் கடந்த காலங்களில் முனிவர்கள் அறிந்திருந்தனர்.(6) அற மீறல்களாக இருக்கும் ஏற்பில்லாத, உண்மையற்ற சொற்களை (எவரும்) கேட்கமாட்டார்கள். ஏற்புடையவையாக இருப்பினும் தீங்கிழைக்கும் சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது என முனிவர்கள் கண்டிக்கின்றனர்.(7) ஓ! நன்றாகக் கேட்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! அனைத்தையும் அறிந்தவனே, என் கடமையும், பொறுப்பும், உனக்கு நன்மையை விளைவிப்பதுமான என் சொற்களைக் கேட்டு அதன் படி செயல்படுவாயாக.(8)

Saturday, 17 October 2020

இந்திரனின் மறுமொழி | விஷ்ணு பர்வம் பகுதி – 127 – 071

(பாரிஜாதம் ந தாஸ்யாமீதீந்த்ரபாஷணம்)

Narada's advice and Indra's answers | Vishnu-Parva-Chapter-127-071 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் எச்சரிக்கையை நாரதர் மூலம் கேள்விப்பட்ட இந்திரன்; போர் புரியாமல் பாரிஜாதத்தைக் கொடுப்பதில்லை என உறுதியுடன் சொன்னது...

indra and narada


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நன்மனம் கொண்டவரும், அறம் சார்ந்த அறிவுடனும், நாநயத்துடனும் பேசுபவருமான நாரதர், தேவர்களின் தலைவனுடைய {தேவேந்திரனுடைய} சொற்களைக் கேட்டு இவ்வாறு பேசினார்,(1) "ஓ! பலனை {பலாசுரனைக்} கொன்றவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உன்னிடம் அதிக அக்கறை கொண்டுள்ளதால் உனக்கு நன்மை விளைவிப்பதையே சொல்வேன்.(2) நான் உன் மனநிலையை ஏற்கனவே அறிந்திருந்ததால், வலிமைமிக்கத் தேவனான சிவனுக்கும் பழங்காலத்தில் நீ பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்பதை வசுதேவனின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னேன்.(3) நான் அவனிடம் (பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்லக் கூடாததற்கான) எண்ணற்ற காரணங்களைச் சொன்னாலும் அவன் அவற்றில் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(4) அந்தத் தாமரைக் கண்ணன், "நான் இந்திரனின் தம்பி என்பதால் அவனால் பேணி வளர்க்கப்பட வேண்டியவன் {சீராட்டத்தகுந்தவன்}" என்று என்னிடம் மறுமொழியாகச் சொன்னான்.(5)

Friday, 16 October 2020

இந்திரனிடம் பேசிய நாரதர் | விஷ்ணு பர்வம் பகுதி – 126 – 070

(இந்த்ரஸ்ய பாரிஜாததாநே(அ)ஸம்மதிம்)

The coloquy between Narada and Indra regarding the transplantation of the Parijata | Vishnu-Parva-Chapter-126-070 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சிவனைத் துதித்து இந்திரன் எடுத்த விழா; பாரிஜாதம் பெற தூதாகச் சென்ற நாரதர்; பாரிஜாதத்தைக் கொடுக்காததற்கு காரணங்களை அடுக்கிய இந்திரன்...

Narada and Indra


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிறகு மஹேந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார் நாரத முனிவர்; அங்கே அவர் (சிவனைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற) விழாவைக் கண்டு அந்த இரவைக் கழித்தார்.(1) சிறப்புமிக்க ஆதித்யர்கள், தேவர்களில் சிறந்த வசுக்கள், புண்ணியச் செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடைந்தவர்களும், கல்விமான்களுமான ராஜரிஷிகள்,(2) நாகர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், சாரணர்கள், தவத்துறவுகளை மேற்கொள்ளும் தவசிகள் {தபோதனர்கள்}, ஆயிரக்கணக்கான பிரம்மரிஷிகள், தேவரிகள், முனிவர்கள்,(3) உயரான்ம சுபர்ணர்கள், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகள் ஆகியோரும் நூற்றுக்கணக்கான தெய்வீக உயிரினங்கள் பிறரும் அங்கே கூடியிருந்தனர்.(4)

Monday, 12 October 2020

பாரிஜாத மர வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 125 – 069

(பாரிஜாதஹரணே க்ருஷ்ணப்ரதிஜ்ஞா)

The history of the Parijata tree the coloquy between Krishna and Narada | Vishnu-Parva-Chapter-125-069 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பாரிஜாத மரத்தை வேண்டி இந்திரனிடம் செல்லுமாறு நாரதரிடம் சொன்ன கிருஷ்ணன்; பாரிஜாத மரத்தின் வரலாற்றைச் சொன்ன நாரதர்...

Narada Satyabhama and Krishna


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "எல்லாம்வல்லவனும், அளவில்லா சக்திகளைக் கொண்டவனுமான விஷ்ணு {கிருஷ்ணர்}, நாரதர் புறப்பட விரும்புவதைக் கண்டு அவரிடம் இவ்வாறு பேசினான்.(1) {கிருஷ்ணன்}, "ஓ! பாவமற்றவரே, பெரும் முனிவரே, அறங்கள் அனைத்தின் உண்மை அறிந்தவரே, நீர் சொர்க்கத்திற்குச் சென்று, திரிபுரனை அழித்த நுண்ணறிவுமிக்கவனின் {சிவனின்} சபையினரிடம் பேசி,(2) பாகசாசனனிடம் {இந்திரனிடம்} நீர் அறிந்த வகையில் எங்களுக்கிடையில் இருந்த பழங்காலத்து சகோதர அன்பை நினைவூட்டி, அவனிடம் என் ஆணையாக இல்லாமல் வேண்டுகோளாக {பின்வருவனவற்றைத் தெரிவிப்பீராக},(3) முனிவர்களில் முதன்மையானவரும், அறம்சார்ந்தவரும், சிறப்புமிக்கவருமான கசியபரால் பழங்காலத்தில் அதிதியின் மகிழ்ச்சிக்காகப் படைக்கப்பட்ட அந்தப் பாரிஜாத மரத்தை,(4) அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அளவற்ற செழிப்பையும் அருளும் அந்தச் சிறந்த மரத்தை, அறத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான தங்கள் நோன்புகளை நிறைவேற்றுவதற்காக அறம்சார்ந்த தேவியராலேயே உமக்குக் கொடையாக அளிக்கப்பட்ட அந்த மரத்தைக்(5) கொடையளித்த கதைகளைக் கேட்ட என் மனைவியரும் கூட, ஓ! தலைவா, அறத்தையும், சிறப்பான செயல்களின் விளைவால் நேரும் அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} ஈட்டுவதற்காகவும், என் நிறைவுக்காகவும் கொடையளிக்க விரும்புவதாக {இந்திரனிடம்} சொல்வீராக.(6) மரங்கள் அனைத்திலும் சிறந்த பாரிஜாதத்தைத் துவாராவதிக்கு அனுப்புமாறு அவனிடம் கேட்பீராக; கொடைவிழா நிறைவடைந்ததும் அது சொர்க்கத்திற்கு மீளட்டும். பலனை {பலாசுரனைக்} கொன்றவனும், எல்லாம் வல்லவனுமான அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இவ்வாறே நீர் பேச வேண்டும்.(7,8) ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தலைவன் பாரிஜாதமெனும் அந்தச் சிறந்த மரத்தைக் கொடுக்கும் வகையில் நீர் முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.(9) ஓ! தவமெனும் செல்வத்தைக் கொண்டவரே, தூதராகச் செயல்படும் உமது திறன்களையும் அது {அம்முயற்சிகள்} புகழ்பெறச் செய்யும்; உமது செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பதால் இது சாத்தியப்படும் என்பதை நான் அறிவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(10)

Saturday, 10 October 2020

சத்யபாமாவின் துயரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 124 – 068

(பாரிஜாதோத்பத்திகதனம்)

Satyabhama's grief | Vishnu-Parva-Chapter-124-068 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சத்யபாமாவின் துக்கத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்த கிருஷ்ணன்; பாரிஜாத மரம் கொணர்வதாக உறுதி கூறல்; பாரிஜாத மலரின் மகிமையைச் சொன்ன நாரதர்...

Krishna and Satyabhama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, பொறாமையுடன் கூடிய சினத்தின் ஆதிக்கத்தில் இருந்தவளும், கற்புடையவளும், அழகியுமான சத்யபாமாவிடம் மீண்டும் நாராயணன் {கிருஷ்ணன்} பின்வரும் வகையில் அன்புடன் பேசினான்.(1)

Tuesday, 6 October 2020

ருக்மிணிக்குப் பாரிஜாதம் கொடுத்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 122 – 066

(பாரிஜாதநிபம்தநம் ஸத்யாகோபம்)

The present of the Parijata by Krishna to Rukshmini | Vishnu-Parva-Chapter-122-066 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாரதர் கொடுத்த பாரிஜாத மலர்; அதை ருக்மிணி அடைந்தது; ருக்மிணியைத் துதித்த நாரதர்; சத்யபாமாவின் பொறாமை...

Parijata tree and flower Indian postal stamp

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, மதுராவில் பிறந்த கிருஷ்ணனின்[1] மங்கல வரலாற்றை மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் என்னால் முழுமையான நிறைவை எட்ட முடியவில்லை.(1) மனைவியரை மணந்து கொண்டு துவாரகையில் வசித்தவனும், ஆறு குணங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் வரலாற்றை நீர் நன்கறிவீர். இப்போது எனக்கு அதைச் சொல்வீராக" என்று கேட்டான்[2].(2)

Wednesday, 8 July 2020

போட்டிக்கான ஏற்பாடுகள் | விஷ்ணு பர்வம் பகுதி – 83 – 028

(கம்ஸஸ்ய ஜன்மாதிவ்ருத்தம்)

Arrangements for the match | Vishnu-Parva-Chapter-83-028 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் வண்ணானைக் கொன்ற கிருஷ்ணன்; பூமாலை கட்டும் குணகன்; திரிவிக்ரையின் கூன் நிமிர்த்திய கிருஷ்ணன்; வில் ஒடித்த கிருஷ்ணன்; செய்தியை அறிந்த கம்ஸன்...

Kamsa and Narada

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போஜ குலத்தைச் சேரந்தவனான கம்ஸன், வில் முறிக்கப்பட்ட இந்நிகழ்வைக் குறித்துத் தியானித்துப் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகவும், மனமுடைந்தவனாகவும் இருந்தான்.(1) அவன், "மனிதர்களால் பாதுகாக்கப்படும் இரும்பாலான வில்லை முறிக்கவும், {அரங்கைவிட்டு} வெளியேறவும் ஒரு சிறுவனால் எவ்வாறு இயலும்?(2) நாரதர் முன்னறிவித்தபடியே, தேவகியின் ஆறு வீர மகன்களை அழிக்கும் பெரும் நிந்தனைக்குரிய, பயங்கரமான செயலை அச்சத்தின் காரணமாக நான் செய்ததன் விளைவால் உண்டான விதியை இப்போது ஆண்மையினால் எவனாலும் தாக்குப்பிடிக்க முடியாது" என்று நினைத்தான்.(3,4)

Thursday, 4 June 2020

கம்ஸனிடம் அவனது மரணத்தை அறிவித்த நாரதர் | விஷ்ணு பர்வம் பகுதி – 56 – 001

(நாரதாகமனம்)

Kansa is informed of his death by Narada | Vishnu-Parva-Chapter-56-001 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மதுரா நகரத்திற்குச் சென்ற நாரதர்; கம்ஸனின் அழிவுக்காக விஷ்ணு பிறக்கப் போவதைச் சொல்லி அவனுக்கு அச்சத்தை ஊட்டியது; அசுரர்களுக்குக் கம்ஸன் இட்ட ஆணை...

Kansa and Narada

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தெய்வீக முனிவரான நாரதர், விஷ்ணுவும், மற்ற தேவர்களின் கூறுகளும் {அம்சங்களும் பூமியில்} இறங்க {அவதரிக்கப்} போவதை அறிந்து, கம்ஸனுக்கு நேரப்போகும் மரணத்தைச் சொல்ல மதுரா நகருக்குச் சென்றார்.(1) முனிவர்களில் முதன்மையான அவர், தேவலோகத்தில் இருந்து இறங்கி, மதுராவின் நந்தவனத்தை {உபவனத்தை / புறநகரை} அடைந்து, உக்ரசேனனின் மகனான கம்ஸனிடம் ஒரு தூதனை அனுப்பினார்.(2) அவன் {அந்தத் தூதன்} நந்தவனத்தில் முனிவர் {நாரதர்} வந்திருப்பதை {கம்ஸனிடம்} தெரிவித்தான். தாமரை போன்ற கண்களைக் கொண்ட அந்த அசுரன், நாரதர் வந்திருப்பதைக் கேட்டு, தன் நகரை விட்டு விரைந்து சென்றான்.(3) அவன் {கம்ஸன்}, புகழ்பெற்ற பிராமண முனிவரும், பாவங்கள் அனைத்தையும் களைந்தவரும், தன் விருந்தினருமான நாரதர், சூரியனைப் போன்ற சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அங்கே இருப்பதைக் கண்டான். அவரை வணங்கி முறையாக வழிபட்ட அவன், நெருப்பைப் போல ஒளிரும் ஒரு பொன் இருக்கையை அவருக்காகக் கொண்டு வந்தான். சக்ரனின் {இந்திரனின்} நண்பரான அந்த முனிவர் {நாரதர்}, அந்த இருக்கையில் அமர்ந்தார்.(4-6)

பிறகு அவர் {நாரதர்}, பெருங்கோபம் கொண்டவனும், உக்ரசேனனின் மகனுமான அவனிடம் {கம்ஸனிடம்}, "ஓ! வீரா, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட பணிகளால் நீ என்னை முறையாக வழிபட்டாய். இப்போது நான் சொல்லப் போவதைக் கேட்டு ஏற்பாயாக.(7) ஓ! மகனே, பிரம்ம லோகம் மற்றும் தேவலோகங்களில் உள்ள நந்தனம் மற்றும் சைத்ரரதத் தோட்டங்களில் திரிந்து, சூரியனின் நண்பனும், பெரும் மலையுமான ஸுமேருவை அடைந்தேன்.(8,9) தேவர்களும் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர். புனித ஆறுகள் அனைத்தின் புனித நீரிலும் நீராடிவிட்டு, நினைத்த மாத்திரத்தில் பாவங்கள் அனைத்தையும் அழியச் செய்பவளும், மூவழிகளில் ஓடையாகச் செல்லக்கூடியவளுமான தெய்வீக கங்கையைக் கண்டேன்.(10) அங்கேயுள்ள புண்ணியத்தலங்கள் அனைத்திலும் முறையாக நீராடிய பிறகு, பிராமண முனிவர்களால் நாடப்படுவதும், தேவ, கந்தர்வ மற்றும் அப்சரஸ்களின் இசையால் நிரம்பியதுமான பிரம்மனின் அரண்மனையை {சபையைக்} கண்டேன்.(11-12)

ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஸுமேரு மலையின் உச்சியில் தேவர்களின் கூட்டத்தை நடத்தினார். நானும் என் வீணையை எடுத்துக் கொண்டு, பிரம்மனின் கூட்டத்திற்குச் சென்று, பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, வெண் தலைப்பாகைகளாலும், பல்வேறு ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், தெய்வீக இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுமான தேவர்களும் ஆலோசனை செய்து கொண்டிருப்பதைக் கண்டேன்.(13,14) ஓ! பெரும் மன்னா {கம்ஸா}, அவர்களும், அவர்களது தொண்டர்களும் உன் அழிவுக்காகப் பயங்கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அங்கே நான் கேள்விப்பட்டேன்.(15) மதுராவில் வாழும் உன் தமக்கை {அக்காளான} தேவகியின் எட்டாவது கருவில் வரும் குழந்தை உனக்கு மரணமாக {மிருத்யுவாக} இருப்பான்.(16) ஓ! வீரா, சொர்க்கத்தில் இருப்பவனும், தேவர்களின் பெரும்புதிரும், அனைத்திலும் அடையாளம் காணப்படுபவனுமான சுயம்புவால் (விஷ்ணுவால்) உனக்கு மரணம் நேரும் என்று ஆராய்ந்து அறியப்பட்டிருக்கிறது. ஓ! கம்ஸா, தேவர்களின் தேவனான அவனது கைகளில் மரணத்தைச் சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது உனக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும்[1]. எனவே, இப்போதே அவனை நினைவுகூர்வாயாக. தேவகியின் கருவை அழிக்கவும், உன் செல்வத்தையும், இன்ப நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கவும் முயல்வாயாக. நான் உன்னிடம் பேரன்பு கொண்டிருப்பதால், ஸுமேரு மலையின் உச்சியில் நடந்தவற்றை இங்கே வந்து சொன்னேன். நான் இனி உன்னிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். நீ நலமாக இருப்பாயாக" என்றார் {நாரதர்}".(17-20)

[1] {தேசிராஜு ஹனுமந்த ராவ் ஹரிவம்சத்தின் முதல் பர்வத்தை மொழிபெயர்த்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பர்வங்களை மொழிபெயர்த்த} புருஷோத்தம், ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பில், "தேவர்களின் பாதுகாவலனாகவும், தெய்வீகமானவற்றின் உறைவிடமாகவும் அவனே இருப்பான். தேவர்களின் பரம புதிரான அவனே உன் மரணத்திற்குக் காரணமாக இருப்பான். தேவர்களின் விடுதலை மற்றும் இன்பத்திற்கான பொருள் அவனே. தேவர்களின் ஸ்வயம்பு அவனே. தெய்வீகப் பேருண்மை அவனே என அதனால்தான் நான் சொல்கிறேன். கம்ஸா, மதிப்புக்குறிய இவனே கடந்த காலத்திலும் உன் மரணத்திற்குக் காரணமாக இருந்தான். அவனை நினைவுகூர்ந்து, தேவகியின் கருவை அழிப்பாயாக" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தேவர்களுக்கு அனைத்துமானவன் அவனே. சொர்க்கத்தின் புகலிடம் அவனே. உன் மரணத்திற்குக் காரணனும் அவனே என்பது தேவர்களின் பரம ரகசியமாகும். உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் அவனே. ஸ்வயம்பூ அவனே. பெரியவனும், தெய்வீகமானவனுமான அவனே இப்போது பிறக்கப் போகிறான். அதை நான் சொல்லவும் வல்லனல்லேன். கடந்த காலத்தில் ஏற்கனவே உன் மரணத்திற்குக் காரணமாக அமைந்ததில் அவன் செருக்குடன் இருக்கிறான். ஓ! கம்ஸா, அதை நினைவில் கொள்வாயாக. நீ முயற்சி செய்தால் அவனது பிறப்பைத் தடுக்கலாம்" என்றிருக்கிறது. மஹாபாரதத்தைத் தமிழில் பதிப்பித்த மணலூர் வீரவல்லி ராமானுஜாச்சாரியர் அவர்களின் மருமகனான உ.வே.எஸ்.ராமானுஜய்யங்காரின் பதிப்பில், "அவன் அத்தேவர்களுக்குப் பரமும், அபரமும், (மோக்ஷமும், ஸ்வர்க்கமும்). அவனே தேவலோகவாஸிகளுக்கு ஸ்வயம்பூ எனும் ப்ரஹ்மாவும் ஆவான். ஆதலால், அது திவ்யமானது; மிகப்பெரியது; அதை உனக்குச் சொல்கிறேன். கம்ஸ! முன்னமேயே எல்லோருக்கும் ம்ருத்யுவாய் இருந்து கொண்டிருக்கும் அவனே உனக்கு இப்பொழுது ஷ்வாக்யம்ருத்யுவாக வரப்போகிறான் என்று நினைத்துக் கொள். தேவகியின் கர்ப்பத்தை அழிப்பதில் முயற்சியும் செய்யப்படட்டும்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாரதர் இதைச் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு, அவரது சொற்களில் தியானம் செய்த கம்ஸன் உதடுகள் திறந்து உரக்க நகைக்கத் தொடங்கினான். அதன் பிறகு அவன், தனக்கு முன்பிருந்த தன் பணியாட்களிடம் சிரித்தவாறே, "உண்மையில் தேவர்கள் நாரதரிடம் கேலி பேசியிருக்கின்றனர், காரியங்களில் அவருக்கு அறிவேதும் இல்லை.(21,22) நான் என் அரியணையில் இருக்கும்போதும், உறங்கும்போதும், பித்தடைந்தோ, மதி மயங்கியோ இருக்கும்போதும்கூட வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களால் கிஞ்சிற்றும் என்னை அச்சுறுத்த முடியாது.(23) மனிதர்களின் நிலத்தில் {இவ்வுலகத்தில்} என்னைச் சினங்கொள்ளச் செய்யும் துணிவு கொண்டவன் எவன்? என்னுடைய இந்தப் பெருங்கரங்கள் இரண்டைக் கொண்டு என்னால் இந்தப் பூமியையே கலங்கடிக்க இயலும்.(24) தேவர்களைப் பின்பற்றும் மனிதர்களையும், விலங்குகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்தையும் இன்று முதல் நான் பெரிதும் ஒடுக்கப் போகிறேன்.(25) குதிரையின் வடிவில் இருக்கும் கேசியிடமும், பிரலம்பன், தேனுகன், காளையின் வடிவில் இருக்கும் அரிஷ்டன், பூதனை, காளியன் மற்றும் பிற அசுரர்களிடமும் இந்த ஆணையைக் கொண்டு சேர்ப்பீராக.(26) நீங்கள் பல்வேறு வடிவங்களை ஏற்று உலகம் முழுவதும் திரிந்து, எனக்கு எதிரானவர்களைக் கண்டு அவர்களைக் கொல்வீராக.(27) கருவில் இருந்தே நமக்கு அச்சம் நேரப் போகிறதென நாரதர் சொன்னதால், பெண்களால் கருவில் கொள்ளப்பட்ட அனைவரின் நடமாட்டங்களையும் எப்போதும் நீங்கள் அறிந்திருப்பீராக[2].(28) நான் உங்கள் தலைவனாக இருக்கும்போது தற்செயலான எந்தப் பேரழிவைக் குறித்தும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. எனவே, கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, உங்களுக்கு இன்பந்தரும் பொருட்களை உங்கள் விருப்பப்படி அனுபவிப்பீராக.(29) நாரதர் சச்சரவுகளைப் பெரிதும் விரும்புபவரும், கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும் நோக்கம் கொண்டவருமாவார். நிதான மனம் கொண்ட அந்தப் பிராமணர், உலகங்கள் அனைத்திலும் பயணித்து, ஒருவரையொருவர் எதிர்ப்பதற்காக, மிக அமைதியான மனோபாவம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகளை உண்டாக்குகிறார், பல்வேறு வழிமுறைகளின் மூலம் மன்னர்களுக்கு மத்தியில் பகைமையை உண்டாக்குகிறார்" என்றான் {கம்ஸன்}.(30,31)

[2] புருஷோத்தம், ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பில், "கருவுற்றவர்களின் நிலையைக் கண்டறிவீராக. கருவில் இருந்தே நமக்கு அச்சமேற்படும் என்று நாரதர் சொன்னார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமியில் பிரசவத்தை எதிர்பார்திருக்கும் அனைவரின் நிலையையும் கண்டறிவீராக. கருவின் காரணமாக நமக்குப் பேரச்சம் ஏற்படும் என நாரதர் சொன்னார்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜய்யங்காரின் பதிப்பில், "கர்ப்பத்திலிருக்கும் ப்ராணிகளின் போக்குங்கூட அறியத்தகுந்தது. நாரதரால், கர்ப்பங்களிலிருந்து தானே நமக்குப் பயம் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.

வீண் பகட்டுடன் அவ்வாறு தற்புகழ்ச்சி செய்த கம்ஸன், தன் அரண்மனைக்குள் நுழைந்தாலும், அவனது இதயம் கோபத்தீயில் எரிந்து கொண்டிருந்தது" என்றார் {வைசம்பாயனர்}.(32)

விஷ்ணு பர்வம் பகுதி – 56 – 001ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்