Showing posts with label கசியபர். Show all posts
Showing posts with label கசியபர். Show all posts

Friday, 4 February 2022

வேட்டை | பவிஷ்ய பர்வம் பகுதி – 81

(ஹம்ஸடிம்பகயோர்ம்ருகயா)

Hunting | Bhavishya-Parva-Chapter-81 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹம்சனும் டிம்பகனும் தங்கள் நண்பன் ஜனார்த்தனனை காட்டில் வேட்டைக்கு அழைத்துச் செல்வது...


Kings go to Hunting

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு நாள், ஹம்சன், டிம்பகன் என்ற அந்த வீரர்கள் இருவரும் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்துத் தேர்கள், யானைகள், குதிரைகள் துணையுடன், தங்கள் நண்பன் ஜனார்த்தனனையும் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.(1) மன்னா, காட்டில் நுழைந்ததும் இளவரசர்கள் இருவரும் புலிகள், சிங்கங்கள், பன்றிகள் பலவற்றைத் தங்கள் கணைகளால் கொல்வதில் ஈடுபட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் நாய்களின் துணையுடன் பாம்புகள் பலவற்றையும், காட்டுவிலங்குகள் பிறவற்றையும் கொன்றனர்.

Thursday, 8 July 2021

விஷ்ணுவின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 44

(கஷ்யபாதிந்ப்ரதி மஹாவிஷ்நோர்வரப்ரதாநகதாவதார꞉)

Vishnu promises help to the gods | Bhavishya-Parva-Chapter-44 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் :  பதிவின் சுருக்கம்: கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; விஷ்ணு கொடுத்த உறுதிமொழி...

Promise of Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இருபிறப்பாளர்களில் முதன்மையான கசியபரால் ஓதப்படும் மிகச் சிறந்த துதிகளைக் கேட்ட தலைவன் நாராயணன்[1], மேகங்களுடைய முழக்கங்களின் மூலம் கம்பீரமான இனிய குரலில் அந்தப் பெருந் தேவர்களிடம் பேசினான்.{1,2} சொற்கள் வானத்தில் இருந்து கேட்டாலும், எவராலும் தலைவனைக் காணமுடியவில்லை. அந்த ஈஷ்வரன் பெரும் மகிழ்ச்சியுடன் பேசினான்.{3}(1-3)

Wednesday, 7 July 2021

பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43

(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)

Brahma instructs the devas to go to Vishnu | Bhavishya-Parva-Chapter-43 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் :  பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்...

Lord Vishnu and Goddess Lakshmi in Milk ocean Ksheer Sagar Parkadal

பிரம்மன் {தேவர்களிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}

கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42

(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)

The gods go to Kashyapa for finding out means for the destruction of Bali | Bhavishya-Parva-Chapter-42 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை...

Brahmas Hall

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்} வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?" என்று கேட்டான்.(1)

Tuesday, 29 June 2021

வேதங்கள் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 32

(ஹிரண்யகர்பாத்யுத்பத்திகதநம்)

The creation of Vedas | Bhavishya-Parva-Chapter-32 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகர்பனின் பிறப்பு; காயத்ரி, சாவித்ரி, வேதங்கள் படைக்கப்பட்டது; பிரம்மனின் சந்ததி; தக்ஷன், கசியபர், மனு, தர்மன், சந்திரன்...

One Universe among unlimited material universes

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அண்டத்தைப் படைக்க விரும்பிய தலைவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு அவன் தியானித்துக் கொண்டிருந்த போது அவனுடைய வாயில் இருந்து ஒரு புருஷன் வெளியே வந்தான்.(1)

Monday, 31 May 2021

தேவாசுரப் போரின் தொடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 23

(ஈஷபக்திமாஹாத்ம்யம்)

The beginning of fight between Devas and Daityas | Bhavishya-Parva-Chapter-23 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கசியபரையும், அவரது மகன்களையும் வேள்வி செய்யத் தூண்டிய பிரம்மன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் தொடங்கிய போர்; விஷ்ணு கொடுக்கும் சத்வ குணம்...

War between devas and asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வேதங்களை நன்கு அறிந்தவர்களும், சடங்குகளை {செயல்களைத்} தவிர்த்ததால் பாவங்கள் அண்டாதவர்களும், நாரதரின் தலைமையிலானவர்களுமான ரிஷிகளும், கந்தர்வர்களும், அந்தப் பிராமணர்களின் முன்னிலையில் சூரியனையும், சந்திரனையும் நிறுத்தி அவர்களை வழிபட்டனர். மேலும் அவர்கள் தந்தையைத் துதிக்கும் ஒரு மகனைப் போல எப்போதும் பெரும்பாட்டனை {பிரம்மன்} வழிபட்டனர்.

Monday, 23 November 2020

அந்தகாசுரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 143 – 087

(அந்தகவதம்)

The history of the Asura Andhaka: They fight again | Vishnu-Parva-Chapter-143-087 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அந்தகாசுரன் பிறப்பு; முனிவர்களின் கவலை; மந்தார வனத்தின் பெருமையை அந்தகனிடம் சொன்ன நாரதர்...

Lord Shiva in forest

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஓ! வைசம்பாயனரே, ஷட்புரம் அழிந்த கதையை நான் கேட்டேன். நீர் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தகனின் அழிவை இப்போது சொல்வீராக.(1) ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், அப்போது நேர்ந்த நிகும்பனின் அழிவையும் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான்.(2)

Friday, 6 November 2020

துவாரகையில் பாரிஜாத மரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 132 – 076

(ஸ்வர்காத்பாரிஜாதாநயனம்)

Indra fights with Krishna | Vishnu-Parva-Chapter-132-076 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும் இடையில் மீண்டும் போர்; அமைதியை நிலைநாட்டிய கசியபரும் அதிதியும்; துவாரகை வந்த பாரிஜாதம்.

wishful tree fulfill ambition parijata tree

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உயர்ந்த ஆன்மா கொண்டவனும், மதுசூதனனுமான கிருஷ்ணன், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டுத் தன் தேரில் ஏறிச் சென்றான்; அவன் தன் தேரில் அமர்ந்து கொண்டு புஷ்கரையின் அருகில் தேவர்களுடன் கூடிய தேவமன்னனை {இந்திரனை} அழைத்தான்.(1,2)

Friday, 23 October 2020

ஹரியின் குணங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 129 – 073

(கஶ்யபக்ருதம் ருத்ரஸ்தோத்ரம்)

Attributes of Hari | Vishnu-Parva-Chapter-129-073 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அமராவதி நகரைக் கிருஷ்ணன் கைப்பற்றப் போகிறான் என்பதை நாரதர் மூலம் கேள்விப்பட்ட இந்திரன் பிருஹஸ்பதியுடன் ஆலோசித்தது; பிருஹஸ்பதி கசியபருடன் ஆலோசித்தது; கசியபர் சொன்ன ருத்ர ஸ்தோத்ரம்...

Kashyapa muni statue in Kovvuru, Andhra Pradesh


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "முனிவர்கள் அனைவரிலும் முதன்மையான நாரதர், அழகிய துவாரகா நகருக்கு வந்து, பகைவரை அடக்குபவனும், உயிரினங்களில் முதன்மையானவனுமான நாராயணனைக் கண்டார்.(1) தன் மாளிகையில் சத்யபாமாவுடன் சுகமாக அமர்ந்திருந்த அவன், சக்திகள் அனைத்தையும் கடந்த தன் எழில்மிகு வடிவின் விளைவால் பேரழகுடன் தோன்றினான்.(2) உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட உயரான்மாவான அந்தக் கேசவன், சிந்தனையில் ஆழ்ந்திருப்பதையும், வெறும் சொற்களால் மட்டுமே தன்னுடைய அன்புக்குரிய சத்யபாமாவுக்கு நிறைவளித்துக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார்.(3) தெய்வீகமான அந்த அதோக்ஷஜன், நாரதரைக் கண்டதும் (தன் இருக்கையில் இருந்து) எழுந்து, சாத்திர விதிப்படி அவரை வழிபட்டான்.(4) நாரதர் சுகமாக அமர்ந்து, (பயணத்தின்) களைப்பனைத்தும் நீங்கிய பிறகு, மதுசூதனன் அவரிடம் பாரிஜாத மரம் குறித்துப் புன்னகையுடன் வினவினான்.(5) அப்போது, ஓ! ஜனமேஜயா, தவத்தகுதி கொண்ட அந்த முனிவர் இந்திரனின் சொற்களை முழு விபரங்குளுடன் அவனது தம்பியிடம் {இந்திரனின் தம்பியான கிருஷ்ணனிடம்} சொன்னார்.(6)

Tuesday, 24 March 2020

சூரியனின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 09

(வைவஸ்வதோத்பத்தி)

Account of the Sun's Offspring - Emergence of Vaivasvata Manu | Harivamsa-Parva-Chapter-09 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சூரியனின் பிறப்பு; வைவஸ்வத மனு, யமன், யமுனையின் பிறப்பு; சஜனையின் நிழலில் பிறந்த சாயாதேவி; சாவர்ணி மனு, சனீஸ்வரன் பிறப்பு; சூரியனின் கடுமையைக் குறித்துச் செதுக்கிய விஸ்வகர்மன்; அஸ்வினி தேவர்களின் பிறப்பு; விஷ்ணுவின் சக்கரத்தை வடிவமைத்த விஸ்வகர்மன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பகைவரை அடக்குபவனே, கசியபர், தக்ஷனின் மகளான அதிதியிடம் விவஸ்வானை {சூரியனைப்} பெற்றார். அவன் {துவாஷ்டிரியின் / விஸ்வகர்மாவின் மகளான} ஸஜனா {ஸஞ்சனா} தேவியை மணந்தான்.(1) அந்த அழகிய மங்கை ஸுரேணு என்ற பெயரில் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாள். உயர் ஆன்மா கொண்டவனும், தெய்வீகமானவனுமான மார்த்தாண்டனின் (சூரியனின்) மனைவியும், அழகும், இளமையும் கொண்டவளுமான அவள், தன் கணவனின் அழகில் நிறைவடைந்தாளில்லை[1]. இந்தப் பூமியில் உள்ள பெண்களின் மத்தியில், ஸஜனை பெரும் தவச் சக்திகளைக் கொடையாகப் பெற்றிருந்தாள். சூரியனின் கதிர்களால் எரிந்த உடலுடன் கூடிய அவள் அழகாகத் தெரியவில்லை.(2-4) கசியபர் அறியாமையில் இருந்தவளிடம் (அதிதியிடம்) அன்புடன் "உன் கரு[2] இறக்கவில்லை" என்று சொன்னதால், அவன் மார்த்தாண்டன் என்றழைக்கப்பட்டான்.(5)

Friday, 21 February 2020

குலங்களின் வரலாறு - தக்ஷனின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 03

(மருத்துத்பத்திகதனம்)

An account of various families: Daksha's offspring| Harivamsa-Parva-Chapter-03 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தக்ஷன் சந்ததியை உண்டாக்கிய வகை; ஹர்யஷ்வர்கள்; ஸபலாஷ்வர்கள்; நாரதரின் மறுபிறப்பு; கசியபர்; தக்ஷனின் மகள்கள்; உயிரினங்களின் பிறப்பு...

ஜனமேஜயன், "ஓ! வைசம்பாயனரே, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் {உரகர்கள்} மற்றும் ராட்சசர்களின் தோற்றத்தை விரிவாக விளக்குவீராக" என்று கேட்டான்.(1)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்