மஹாபாரதத்தில் கிருஷ்ணன் திரௌபதியின் சுயம்வர நேரத்தில் இளைஞனாக நமக்கு அறிமுகமாகிறான். அவனது குழந்தைப் பருவம் முதல், முதுமைப் பரும் வரையுள்ள செய்திகளை ஹரிவம்சமே தருகிறது. இந்தச் செய்திகளை அறிய பாகவதத்தையும், விஷ்ணு புராணத்தையும் நாடலாமே என்பவர்களுக்கு, அவற்றை விட ஹரிவம்சமே காலத்தால் மிக முந்தையது என்பதும், மஹாபாரதத்தைச் சொன்ன அதே வைசம்பாயனரே ஹரிவம்சத்தையும் உரைப்பவர் என்பதும் நிச்சயம் நிறைவைத் தரும். ஹரிவம்சத்தை அறியாமல், மஹாபாரதத்தின் பெரும்பகுதிகளை நுணுக்கமாகப் புரிந்து கொள்ள இயலாது என்பதே இதன் முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கிறது.
சம்ஸ்கிருத மூலத்திற்கு நெருக்கமாகத் தமிழாக்கப்பட்டது.
முகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | உத்தர ராமாயணம் | தொடர்புக்கு
Showing posts with label விஷ்ணு பர்வம். Show all posts
Showing posts with label விஷ்ணு பர்வம். Show all posts
Wednesday, 17 March 2021
Sunday, 14 March 2021
அநிருத்தன் உஷை திருமண வரவேற்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 187 – 131
(உஷயா ஸஹாநிருத்தஸ்ய விவாஹ꞉ உஷாஹரணஸமாப்திஷ்ச)
Aniruddh's wedding and reception | Vishnu-Parva-Chapter-187-131 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : துவாரகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த பெண்கள்; உஷை அநிருத்தனுடன் இன்புற்றிருத்தல்; விஷ்ணு மஹாத்மியம்; பலஸ்ருதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, பெருந்தோள்களைக் கொண்ட ஆஹுகன் {உக்ரசேனன்}, பேரொளி படைத்த கிருஷ்ணனிடம், தன் விழிகள் விரிய, "ஓ! யதுவின் வழித்தோன்றலே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஓ! என் குழந்தாய், நீ {அநிருத்தனும், நீயும்} நலத்துடன் திரும்பியதைக் கண்டோம். அவன் முறையாகக் கவனிக்கப்படுகிறான். அநிருத்தன் மீண்டதற்கும், திருமணம் செய்து கொண்டதற்கும் பெரும் விழா ஒன்றை {திருமண வரவேற்பை} ஏற்பாடு செய்வாயாக.(2) பெருமைமிகு உஷை, அநிருத்தனுடன் சேர்ந்தவளாகவும், தோழிகளால் சூழப்பட்டவளாகவும் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(3) உயரான்மக் கும்பாண்டனின் பெருமைமிகு மகள் {ராமா / ராமை / ரமை} உஷையின் தோழியாகச் சேர்க்கப்பட வேண்டும். வைதர்ப்பி {விதர்ப்ப மன்னனின் மகள்}[1] செழித்திருக்கட்டும்.(4) எழில்மிகு கும்பாண்டன் மகளைச் சாம்பனுக்கும், எஞ்சிய கன்னிகையரை பிற இளவரசர்களுக்கும் முறையாக {திருமணம் முடித்துக்} கொடுப்பாயாக.(5)
Saturday, 13 March 2021
வருணனுடன் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 186 – 130
(அநிருத்தஸ்ய நாகபாஷமோசநம் க்ருஷ்ணஸ்ய வருணாலயகமநம் வருணேந ஸஹ யுத்தம் த்வாரகாப்ரத்யாகமநம் ச)
Krishna finds Aniruddha; gives the kingdom to Kumbhanda and fights with Varuna for cows | Vishnu-Parva-Chapter-186-130 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நாகபாசத்தில் இருந்து விடுபட்ட அநிருத்தன்; உஷை அநிருத்தன் திருமணம்; கும்பாண்டன் நாட்டைப் பெற்றது; பசுக்களின் நிமித்தம் வருணனோடு நடந்த போர்...
Friday, 12 March 2021
பாணனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 185 – 129
(கார்திகேயாபயாநம் பாணபாஹுச்சேதநம் பாணஸ்ய ஹராத்வரளாபாதிகீர்தநம் ச)
The battle between Vana and krishna | Vishnu-Parva-Chapter-185-129 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மயிலை ஒடுக்கிய கருடன்; பாணனுக்கு உதவிய சிவன்; சக்கர ஆயுதத்தால் கைகள் துண்டிக்கப்பட்ட பாணன்; சிவனிடம் ஐந்து வரங்களைப் பெற்ற பாணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{பின்பு பாணன், இசைக்கருவிகளின் ஒலி, பேரிகைகளின் பெரு முழுக்கம், அசுரர்களின் சிங்க முழக்கம் ஆகியவற்றுடன் போர்க்களத்தில் கிருஷ்ணனை எதிர்த்துச் சென்றான்}.(36) பாணன் புறப்பட்டு வந்து நிற்பதைக் கண்டு கிருஷ்ணனும் கருடன் மீதேறி பாணனை எதிர்த்துச் சென்றான்.(37) யது மன்னனும் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனும், கருடவாகனனுமான கிருஷ்ணன் அணுகி வந்து நிற்பதைக் கண்ட பாணன் கோபத்தால் நிறைந்தவனாக வாசுதேவனிடம்,(38,39) "நில்! காத்திருப்பாயாக. இன்று என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்பப் போவதில்லை. உயிருடன் துவாரகை சென்று உன் நண்பர்களைக் காணப் போவதில்லை.(40) ஓ! மாதவா, நீ காலனால் தூண்டப்பட்டவனாக இருக்கிறாய். எனவே, போரில் என்னிடம் வீழ்ந்து, உன் மரணத் தருணத்தில் மரங்களின் பொன் இலைகளை நீ காண்பாய்.(41) ஓ! கருடத்வஜா, எட்டுக் கைகளைக் கொண்ட உன்னால், ஆயிரங்கைகளைக் கொண்டு என்னுடன் எவ்வாறு போரிட இயலும்?(42) இன்று நீயும், உன் நண்பர்களும் இந்தச் சோணித நகரத்தில் என்னால் கொல்லப்படுவீர்கள், நீ துவாரகையை நினைப்பாய்.(43) பல்வேறு ஆயுதங்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய ஆயிரம் கைகளும் கோடிகளாகப் பெருகுவதை நீ இன்று காண்பாய்" என்றான்.(44)
Wednesday, 10 March 2021
போர்க்களம் புகுந்த கார்த்திகேயன் | விஷ்ணு பர்வம் பகுதி – 184 – 128
(கார்திகேயாபயாநம் பாணபாஹுச்சேதநம் பாணஸ்ய ஹராத்வரளாபாதிகீர்தநம் ச)
Kartikeya goes to the battle-field | Vishnu-Parva-Chapter-184-128 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : குகனோடு போரிட்ட கிருஷ்ணன்...
ஹரிஹர ஐக்கியம் | விஷ்ணு பர்வம் பகுதி – 183 – 127
(பிரஹ்மவாக்யாத்க்ருஷ்ணபாணயோர்யுத்தநிவ்ருத்தி꞉ பிதாமஹஜிஜ்ஞாஸயா மார்கண்டேயகர்த்ருகம் ஹரிஹரமாஹாத்ம்யகீர்தனம் ஸ்தவகதனம் ச)
The earth goes to Brahma; Markandeya explains how Brahma, Vishnu, Siva are one | Vishnu-Parva-Chapter-183-127 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சிவனைக் கலங்கடித்த கிருஷ்ணன்; பிரத்யும்னன் செய்த போர்; சிவனிடம் பேசிய பிரம்மன்; சிவ விஷ்ணு ஐக்கியம் நிறுவப்படல்; ஹரிஹராத்மகத் துதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{வைஷ்ணவ ஆயுதத்தால்} (சிவனின்) முக்கண்களும் எரிந்து கொண்டிருந்த போது, உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின; நந்தியும், ருத்ரனும், அவனது தேரும் புலப்படவில்லை.(1) அப்போது கோபத்தாலும், பலத்தின் காரணமாகவும் இரண்டு மடங்கு பிரகாசத்துடன் எரிந்து கொண்டிருந்த ருத்ரன், நான்கு பக்கங்களிலும் கூரிய ஈட்டிகளைக் கொண்டதும், திரிபுரமெரிக்கப் பயன்பட்டதுமான தன் கணையை {சதுர்முகப் பாணத்தை} எடுத்துக் கொண்டான்.(2) அந்த முக்கண் தேவன், அந்தக் கணையை எடுத்துத் தன் வில்லில் பொருத்தி அதை ஏவ முற்பட்டபோது, அனைவரின் மனங்களையும் அறியும் உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்} அதை அறியவந்தான்.(3) அதன்பிறகு, கரநளினம் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான புருஷோத்தமன் ஜிரும்பணம் {கொட்டாவி} எனும் ஆயுதத்தை எடுத்து, அதைக் கொண்டு ஹரனைக் கொட்டாவி விட வைத்தான் {அவனைச் சோம்பியிருக்கச் செய்தான்}.(4) அசுரர்களையும், ராட்சசர்களையும் வெல்பவனும், வில், கணைகளுடன் கூடியவனுமான தெய்வீக ஹரன், அந்தக் கணையால் கலக்கமடைந்து, நனவை இழந்தான்.(5) {சக்தியால் செருக்கில் இருந்த பாணன், வில், கணைகளுடன் கூடிய ஹரன் கொட்டாவி விடுவதைக் கண்டு அவனைத் தூண்டினான்}.
Tuesday, 9 March 2021
சங்கரனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 182 – 126
(பாணஸைந்ய꞉ ஸஹ க்ருஷ்ணஸ்ய யுத்தம் பாணஸைந்யாபயாநம் ருத்ரேண ஸஹ க்ருஷ்ணயுத்தாதிகீர்தநம் ச)
The fight between Krishna and Shankara | Vishnu-Parva-Chapter-182-126 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : புறமுதுகிடும் அசுரப் படையைத் தடுத்துப் பேசிய பாணாசுரன்; சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான போர்; பாணனுடனான நேரடிப் போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போர்க்களத்தில் மூன்று அக்னிகளாக நின்று கொண்டிருந்த அந்த மூன்று வீரர்களும் {கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன் ஆகியோர்}, வினதையின் மகனுடைய {கருடனின்} முதுகில் விரைந்து ஏறி அங்கே பகைவருடன் போரிடத் தொடங்கினர்.(1) பெருஞ்சக்திவாய்ந்த வீரர்களான அம்மூவரும் கருடனின் முதுகில் அமர்ந்து, கணைமாரியைப் பொழிந்து அந்தத் தானவப் படையை விரட்டினர்.(2) சக்கரம், கலப்பை, கணைகள் ஆகியவற்றின் தாக்குதல்களால் பீடிக்கப்பட்டவர்களும், தடுக்கப்பட முடியாதவர்களும், பெரிய படையினருமான அந்தத் தானவப் படையினர் கோபமடைந்தனர்.(3) காய்ந்த விறகுகளால் அறையில் பெருகும் நெருப்பைப் போலவே கிருஷ்ணனின் கணைகளால் மூண்ட நெருப்பானது, சுற்றிலும் பெருகி,(4) அண்ட அழிவின் போது எரியும் நெருப்பெனப் பெருகி, போர்க்களத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தானவர்களை எரித்தது.(5)
Friday, 5 March 2021
ஜ்வரத்துக்கு வரமளித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 181 – 125
(ஜ்வரஸ்ய பராஜயோ வரளாபஷ்ச)
Krishna's boon to jvara | Vishnu-Parva-Chapter-181-125 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜ்வரதேவனுடன் கடும்போர் புரிந்த ராமகிருஷ்ணர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பகைவரைக் கொல்பவனான கிருஷ்ணன், தன் கைகளால் தாக்கப்பட்ட ஜ்வரம் இறந்துவிட்டதாகக் கருதி, அவனைப் பூமியின் பரப்பில் வீசி எறிந்தான்.(1) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட ஜ்வரம், கிருஷ்ணனின் கரங்களில் இருந்து விடுபட்டாலும், அவனது உடலைவிட்டு அகலாமல் உள்ளே நுழைந்தான்.(2) ஒப்பற்ற சக்தி கொண்டவனும், ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன், மந்த இயக்கம் கொண்டவனாக மீண்டும் மீண்டும் தரையைத் தீண்டி தன்னைத் தாங்கிக் கொண்டான்.(3) அவன் உறக்கத்தால் பீடிக்கப்பட்டான், அவனது நடை தளர்ந்தது, மயிர்கள் சிலிர்த்தன. அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சும், கொட்டாவியும் விட்டுக் கொண்டிருந்தான்.(4) பகை நகரங்களை வெற்றி கொள்பவனும், பெரும் யோகியுமான கிருஷ்ணன், இவ்வாறு பலவீனத்தால் பீடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கொட்டாவி விட்டபடியே இருந்து, நீண்ட நேரத்திற்குப் பிறகு தன் இயல்பு நிலைக்கு மீண்டான்.(5)
Thursday, 4 March 2021
ஜ்வரத்துடன் போரிட்ட கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 180 – 124
(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)
Krishna's battle with jvara (fever) | Vishnu-Parva-Chapter-180-124 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜ்வரதேவனுடன் கடும்போர் புரிந்த ராமகிருஷ்ணர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டே மலைச்சிகரங்களுக்கு ஒப்பான தண்டம், கதாயுதம், கலப்பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பறவைகளில் முதன்மையான கருடனின் முதுகில் ஏறிச் சென்றனர். அப்போது, ஓ! ஜனமேஜயா, ரோஹிணியின் மகன் {பலராமன்} போரில் ஈடுபட்டபோது, அவனுடைய வடிவமானது, யுக முடிவில் அனைத்தையும் எரிக்க விரும்பும் காலனைப் போன்று பயங்கரம் நிறைந்ததாக வளர்ந்தது.(64,65) போரில் திறன்மிக்கவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பலதேவன், தன் கலப்பையால் பகைவரை இழுத்துத் தன் தண்டத்தால் {முசலத்தால்} அவர்களைக் கலங்கடித்தான்.(66) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான பிரத்யும்னன், எதிர்த்துப் போரிடும் தானவர்களைத் தன் கணைகளால் முறியடித்தான்.(67) நெய் கலந்த மைத்திரளுக்கு ஒப்பானவனும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜனார்த்தனன், தன் சங்கை முழக்கியபடியே பல வழிமுறைகளில் போரிட்டான்.(68) நுண்ணறிவுமிக்கவனான வினதையின் மகன் {கருடன்}, தன் சிறகுகளால் தைத்தியர்களைத் தாக்கி, தன் நகங்களாலும், அலகாலும் சிதைத்து, அவர்களை யமலோகம் அனுப்பி வைத்தான்.(69) இவ்வாறு கணைமாரியால் தாக்கப்பட்டவர்களும், அந்த நான்கு வீரர்களால் வெல்லப்பட்டவர்களும், பயங்கரம் நிறைந்தவர்களுமான அந்த அசுரப்படையினர் போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்[1].(70)
Wednesday, 3 March 2021
ருத்ராக்னிளுடன் போரிட்ட கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 179 – 123
(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)
Krishna goes to Sonitpura and fights with Rudra's followers on the way | Vishnu-Parva-Chapter-179-123 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பாணபுரி அக்னிகளுடனும், பெரும் முனிவர் அங்கீரசுடனும் போரிட்ட கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சங்குகள், பேரிகைகளின் {தூரியங்களின்} முழக்கம், சூதர்கள், மாகதர்கள், வந்திகளின் ஆயிரக்கணக்கான பாடல்கள்,(1) வெற்றியை அறிவிக்கும் மனிதர்களின் வாழ்த்தொலிகள் ஆகியவை ஒலித்தபோது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, சந்திரனையும், சூரியனையும், சுக்ரனையும் போலத் தோன்றினான்.(2) ஓ! மன்னா, வினதையின் மகன் {கருடன்} வானத்தில் உயர்ந்தபோது, ஹரியின் சக்தியால் அவனுடைய அழகு பெருகி அபரிமிதமானது.(3) தாமரைக் கண்ணனான கேசவன், பாணனைக் கொல்ல விரும்பி எட்டுக் கரங்களைக் கொண்டதும், மலைக்கு ஒப்பானதுமான ஒரு வடிவத்தை ஏற்றான். அந்த நேரத்தில் சாரங்கபாணியான ஜனார்த்தனன், எண்ணற்ற தலைகளைக் கொண்டவனானான்.(4) அவன், வலக்கைகள் நான்கில் வாள், சக்கரம், கதாயுதம், கணைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், இடக்கைகள் நான்கில் தோல் கேடயம், சாரங்கவில், வஜ்ரம், சங்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தான்.(5) {சாரங்கபாணி ஆயிரம் தலைகளைக் கொண்டிருந்தான்}. சங்கர்ஷணன், ஆயிரம் வடிவங்களை ஏற்று,(6) வெண்மையான ஆயுதங்களை ஏந்தி, சிகரங்களுடன் கூடிய கைலாச மலையைப் போல உயிரினங்கள் அனைத்தினாலும் தடுக்கப்பட முடியாதவனாக உதயச் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(7) உயரான்மப் பிரத்யும்னன், போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், சனத்குமாரனைப் போன்ற தோற்றத்தை ஏற்றான்.(8) அதன்பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்}, வலுவாகச் சிறகடித்து எண்ணற்ற மலைகளை நடுங்கச் செய்தபடியும், காற்றின் பாதையைத் தடுத்தபடியும் பறந்து சென்றான்.(9) மனோ வேகத்துடன் கூடிய அவன் சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் புனிதமிக்கப் பாதையைக் கடந்து சென்றான்.(10)
Monday, 1 March 2021
அநிருத்தனுக்கான கவலையில் யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 178 – 122
(ஷ்ருதஹ்ருதாநிருத்தபாஷபந்தநஸ்ய க்ருஷ்ணஸ்ய ஷோணிதபுரகமநம்)
Anxiety of the yadavas for Aniruddha | Vishnu-Parva-Chapter-178-122 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : துவாரகையில் பெண்களின் ஓலம்; அநிருத்தனைத் தேடிச் சென்ற ஒற்றர்கள்; கிருஷ்ணனைத் துதித்த கருடன்; பாணனோடு போர்புரியச் சென்ற கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அநிருத்தன் பணயக் கைதியான போது, அவனது அன்புக்குரிய மனைவியரும், தோழியரும், அவனில்லாமல் அன்றில் பறவைகளைப் போல அங்கே {துவாரகையில்} அழுது கொணிடருந்தனர்.(1) {அவர்கள்}, "ஐயோ, தலைவர் கிருஷ்ணரின் பாதுகாப்பிலும் நாங்கள் அச்சத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் அழுது கொண்டிருக்கிறோம்.(2) எவருடைய தோள்களின் நிழலில் ஆதித்யர்கள், மருத்துகள், இந்திரனின் தலைமையிலான தேவர்கள் ஆகியோரும் தேவலோகத்தில் கவலையில்லாமல் வாழ்கின்றனரோ அவருக்கே இவ்வுலகில் இத்தகைய பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஐயோ, அவரது வீரப் பேரனான அநிருத்தனை அபகரித்துச் சென்றவன் எவன்?(3,4) ஐயோ, தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கும் வாசுதேவரின் கோபமெனும் நெருப்பைத் தூண்டிய அந்தத் தீய மனம் படைத்தவன், இவ்வுலகில் நிச்சயம் அச்சமற்றவனே.(5) அவன், வாயை அகலமாகத் திறந்திருக்கும் யமனுடைய பற்களின் முன் நிற்கிறான். உண்மையில் அத்தகையே பகைவனாலேயே வாசுதேவனின் முன்பு போரில் நிற்க இயலும். சச்சியின் தலைவனாகவே {இந்திரனாகவே} இருந்தாலும், யது மன்னனான கேசவனுக்கு இத்தகைய தீங்கை இழைத்துவிட்டு உயிரோடு தப்ப முடியுமா?(6,7) ஐயோ, இன்று எங்கள் கணவர் அபகரிக்கப்பட்டாரோ, எங்கள் தலைவன் எங்களைக் கைவிட்டு எங்களைப் பரிதாபத்திற்குரியோர் ஆக்கினாரோ. ஓ! எங்கள் தலைவனின் பிரிவால் நாங்கள் யமனின் வசத்தை அடைந்திருக்கிறோம்" என்று சொல்லி அழுதனர்.(8)
Wednesday, 24 February 2021
அநிருத்தனைத் தேற்றிய ஆரியா தேவி | விஷ்ணு பர்வம் பகுதி – 177 – 121
(அநிருத்தக்ருதார்யாஸ்தவோ தத்வரளாபஷ்ச)
The goddess consoles Aniruddha | Vishnu-Parva-Chapter-177-121 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஆர்யா தேவிக்கான துதி; கட்டில் இருந்து விடுபட்ட அநிருத்தன்; ஆர்யா துதியின் பெருமை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலியின் மகனான மன்னன் பாணனால் வீரன் அநிருத்தனும், உஷையும் சோணித நகரத்தில் சிறை பட்டிருந்தபோது,(1) அவன் தன் பாதுகாப்புக்காகக் கௌமாரி தேவியின் {கோடாவதி தேவியின்} புகலிடத்தை நாடி அவளது புகழைத் துதியாகப் பாடினான். {அதைக் கேட்பாயாக}.(2) எல்லையற்றவனும், சிதைவற்றவனும், நித்திய தேவனுமான தலைவன் நாராயணனை வணங்கிவிட்டு,(3) வழிபடத்தகுந்தவளும், வரம் தருபவளும், தேவர்களாலும், உலகங்களாலும் வழிபடப்படுபவளும், சண்டீ, காத்யாயனி, ஆரியா என்று அழைக்கப்படுபவளுமான தேவியை ஹரியால் துதிக்கப்பட்ட அவளது பெயர்களைக் கொண்டு பாடப் போகிறேன்.(4) தேவர்கள், முனிவர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் துதிக்கப்படும் மங்கலையான அந்த ஆர்யா தேவியின் மகிமையை உரைத்துவிட்டு, அனைத்திலும் படந்தூடுருவி இருப்பவளும், தேவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவளுமான அவளைத் துதிக்கப் போகிறேன்.(5)
அநிருத்தன் உஷை காந்தர்வத் திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 176 – 120
(அநிருத்தஸ்யோஷயா ஸஹ காந்தர்வேந விவாஹோ பாணதத்ஸைந்யாப்யாம் யுத்தம் ச)
Chitralekha unites Aniruddha with Usha; Anirudda's fight with Vana's Soldiers | Vishnu-Parva-Chapter-176-120 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : தாமஸ வித்தையால் அநிருத்தனை உஷையிடம் கொண்டு வந்த சித்ரலேகை; பாணனுக்கும், அநிருத்தனுக்கும் இடையில் நடந்த போர்; துவாரகைக்கு வந்த நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சித்திரலேகை துவாரகா நகரை வந்தடைந்து, வாசுதேவனின் அரண்மனையின் அருகில் இருந்து கொண்டு, பாணன் நகருக்கு அநிருத்தன் வந்த வழிமுறையை அறிந்து கொள்ளும் வழிவகைகள் குறித்துச் சிந்தித்தாள்.(1) அவள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நீரில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாரத முனிவரை அவள் கண்டாள்.(2) சித்திரலேகை அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கண்கள் விரிய அவரை அணுகினாள். அவள் அவரை வணங்கிவிட்டு அவரது முன்னிலையில் தலைவணங்கி நின்றாள்.(3)
Thursday, 18 February 2021
தன் காதலனை அழைத்து வர சித்திரலேகையை அனுப்பி வைத்த உஷை | விஷ்ணு பர்வம் பகுதி – 175 – 119
(உஷாயா꞉ ஸ்வப்நதர்ஷநமநிருத்தாநயநார்தம் சித்ரளேகாயா த்வாரகாகமநம் ச)
Usha meets her lover while asleep and exhorts her friends to bring him | Vishnu-Parva-Chapter-175-119 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : உஷையைத் தேற்றிய தோழியர்; சித்ரலேகையிடம் தன் கனவைக் கூறிய உஷை; அநிருத்தனே உஷையின் துணையென நிச்சயித்த சித்ரலேகை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{சோணிதபுரத்துப் பெண்களில் முக்கியமானவர்கள் ஓர் அற்புத நிகழ்வால் பீடிக்கப்பட்டனர்}. அதன்பிறகு வைசாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாளில் {சித்திரை மாத வளர்பிறை துவாதசியில்} அழகிய உஷை தன் தோழியர் சூழ உறங்கிக் கொண்டிருந்தாள். தேவியின் சொற்களால் தூண்டப்பட்டும், அழுதுகொண்டும் அந்த அழகிய கன்னிகை அசைவற்றவளாகக் கிடந்த போது, ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல ஒரு மனிதன் கனவில் தோன்றி அவளை அறிந்தான். {அவனிடம் இருந்து விடுபடுவதற்காகத் துடிக்கும் உடலுடன் அழுது கொண்டிருந்த அவளை அவன் பெண்ணாக உணரச் செய்தான்}. அவள் திடீரெனக் குருதியால் குளித்தவளாகும் அளவுக்கு அந்த மனிதன் அவளை அறிந்தான்.(1-3)
Saturday, 13 February 2021
உமையிடம் உஷை பெற்ற வரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 174 – 118
(பார்வத்யா꞉ ஸகாஷாத் உஷாயா வரளாப)
Bhava's sport and Vana's daughter obtains a boon | Vishnu-Parva-Chapter-174-118 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : அப்சரஸ் சித்திலேகை; பாணனின் மகள் உஷை; பார்வதி தேவியின் அருள்; உஷையின் காமம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் ஓர் அழகிய ஆற்றங்கரையில் தலைவன் பவன் {உமாதேவியுடன் உலவியபடி} விளையாடிக் கொண்டிருந்தான்.(1) அனைத்துப் பருவகாலங்களும் செழிக்கும் அந்த அழகிய காட்டில் அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களுடன் சேர்ந்து கந்தர்வர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(2) பாரிஜாத, சந்தானக மலர்களின் நறுமணத்துடன் கூடிய வானத்தைப் போல அந்த ஆற்றங்கரை மணங்கமழ்ந்து கொண்டிருந்தது.(3)
Sunday, 7 February 2021
பேரசுரன் பாணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 173 – 117
(பாணாஸுராக்யானம்)
The great asura | Vishnu-Parva-Chapter-173-117 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பாணாசுரன் வரலாறு; போரில் பெருவிருப்பம் கொண்ட பாணன்; சிவன், முருகன் ஆகியோரின் உதவியைப் பெற்றது; கும்பாண்டனின் கவலை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நுண்ணறிவுமிக்கவனான அந்த யது மன்னனின் {கிருஷ்ணனின்} ஒப்பற்ற செயல்கள் பலவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(1) ஓ! அறவோரில் முதன்மையானவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, முன்னர் உம்மால் சொல்லப்பட்டதைப் போலப் பாணனிடம் வாசுதேவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை இப்போது கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பிராமணரே, சங்கரனின் பாதுகாப்பையும், அந்தத் தேவதேவனின் மகன் என்ற உரிமையையும், குஹனுடைய {முருகனுடைய} பாதுகாப்பையும் அந்த அசுரனால் பெற முடிந்தது எவ்வாறு? அவனால் கணங்களுடன் வாழ முடிந்தது எவ்வாறு?(3,4) பெருஞ்சக்தி வாய்ந்த பலியின் மகனான அவன் {பாணன்}, தன் சகோதரர்களில் {பலியின் நூறு மகன்களில்} மூத்தவனும், நூற்றுக்கணக்கான தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் கரங்களைக் கொண்டவனும்,(5) பேருடல் படைத்த எண்ணற்ற அசுரர்களால் சூழப்பட்டவனும், நூற்றுக்கணக்கான மாயைகள் செய்வதில் தேர்ச்சியடைந்தவனும் ஆவான். போரில் விருப்பம் கொண்டவனும்,(6) கோபத்தால் தூண்டப்பட்டவனுமான அந்தப் பாணன், போரில் வாசுதேவனால் வீழ்த்தப்பட்டது எவ்வாறு? கேசவன் அவனை உயிருடன் விட்டது ஏன்?" என்று கேட்டான்.(7)
Tuesday, 2 February 2021
கிருஷ்ணனின் ஆற்றல் | விஷ்ணு பர்வம் பகுதி – 172 – 116
(வாஸுதேவபராக்ரமவர்ணனம்)
Krishna's feats described | Vishnu-Parva-Chapter-172-116 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் அளவற்ற ஆற்றலையும், புகழையும் வரிசையாகச் சொன்ன வைசம்பாயனர்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, யதுகுலத்தில் முதன்மையானவனும், நுண்ணறிவுமிக்கவனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஒப்பற்ற செயல்களை மீண்டும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, எண்ணற்றவையும், அற்புதம் நிறைந்தவையும், தெய்வீகமானவையும், சாதாரணமானவையுமான கிருஷ்ணனின் செயல்களைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். ஓ! பாவமற்ற முனிவரே, அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(2,3)
Monday, 1 February 2021
புதிரை விளக்கிய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 171 – 115
(கூடோத்காடனம்)
Krishna explains the mystery | Vishnu-Parva-Chapter-171-115 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கண்ணால் கண்ட அற்புதங்களைக் குறித்துக் கேட்ட அர்ஜுனன்; கிருஷ்ணன் தன்னைப் பரம்பொருளென வெளிப்படுத்திக் கொண்டது...
Sunday, 31 January 2021
பிராமணரின் குழந்தைகளை மீட்ட கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 170 – 114
(மிருதப்ராஹ்மணபுத்ரஸ்ய புன꞉ ப்ரத்யாநயனம்)
Krishna rescues the Brahmana's sons | Vishnu-Parva-Chapter-170-114 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிராமணனின் நான்கு மகன்களையும் மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன்...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "மலைகளையும், ஆறுகளையும், காடுகளையும் கடந்து சென்ற நாங்கள் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலைக் கண்டோம்.(1) அப்போது பெருங்கடலானவன் {சமுத்ரராஜன்}, தன் சொந்த வடிவில் கரங்களைக் கூப்பிய படியும், அர்க்கியத்தைச் சுமந்தபடியும் ஜனார்த்தனனின் முன்பு தோன்றி, "நான் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான்.(2)
Saturday, 30 January 2021
கிருஷ்ணனின் சாரதியாக அர்ஜுனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 169 – 113
(கிருஷ்ணஸ்யோதீசீகமநம்)
Arjuna goes to recue the brahmana and becomes unsuccessful | Vishnu-Parva-Chapter-169-113 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : குழந்தையைக் காக்க முடியாமல் துவாரகை திரும்பிய அர்ஜுனன்; தீப்புகுவதில் இருந்து அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன்; அர்ஜுனனை தனக்குத் தேரோட்டியாக நியமித்தது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒரு கணத்திற்குள் {ஒரு முஹூர்த்த காலத்திற்குள்} அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்த நாங்கள், எங்கள் விலங்குகள் அனைத்தும் களைப்படைந்து இருந்ததால் அங்கேயே {எல்லையிலேயே} தங்கினோம்.(1) சில கணங்களுக்குப் பிறகு நான் விருஷ்ணிகளின் பெரும்படை சூழ நகருக்குள் நுழைந்தேன்.(2) அந்த நேரத்தில் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன, எரியும் கழுகுகளும், விலங்குகளும் எங்களை அச்சுறுத்தின.(3) பெரிய கருங்கொள்ளிகள் அங்கே விழுந்தன, சூரியன் தன் பிரகாசத்தை இழந்திருந்தான், பூமி நடுங்கினாள்.(4) பயங்கரம் நிறைந்தவையும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்தத் தீய சகுனங்களைக் கண்ட நான் கவலையில் நிறைந்தவனாக என்னுடைய படை வீரர்களிடம் ஆயத்தமாக இருக்குமாறு ஆணையிட்டேன்.(5) யுயுதானனின் {சாத்யகியின்} தலைமையிலான விருஷ்ணிகள், அந்தகக் குலப் பெருந்தேர் வீரர்கள் அதைக் கேட்டுவிட்டுத் தங்கள் தங்கள் தேர்களை ஆயத்தம் செய்தனர், நானும் ஆயுதம் தரித்தவனானேன்.(6)
Subscribe to:
Posts (Atom)
Labels
அக்னி
அக்ரூரன்
அங்கிரஸ்
அசமஞ்சன்
அஜபார்ஷன்
அஜமீடன்
அதிதி
அதிரதன்
அநிருத்தன்
அந்தகன்
அனு
அரிஷ்டன்
அருந்ததி
அர்ஜுனன்
அஸ்தி
ஆபவர்
ஆயு
ஆரியா தேவி
ஆஹுகன்
இந்திரன்
இளை
உக்ரசேனன்
உக்ராயுதன்
உசீநரன்
உதங்கர்
உத்தவர்
உபரிசரவசு
உமை
உல்பணன்
உஷை
ஊர்வசி
ஊர்வர்
ஏகலவ்யன்
ஔர்வர்
கக்ஷேயு
கங்கை
கசியபர்
கண்டரீகர்
கண்டாகர்ணன்
கண்டூகன்
கதன்
கபிலர்
கமலாதேவி
கம்ஸன்
கருடன்
கர்க்கர்
கர்ணன்
காதி
காந்திதேவி
கார்த்தவீர்யார்ஜுனன்
காலநேமி
காலயவனன்
காலவர்
காளியன்
கிருஷ்ணன்
குசிகன்
குணகன்
குணவதி
கும்பாண்டன்
குரோஷ்டு
குவலயாபீடம்
குவலாஷ்வன்
கூனி
கைசிகன்
கைடபன்
கோடவி
சகடாசுரன்
சக்ரதேவன்
சங்கன்
சததன்வன்
சத்யகர்ணன்
சத்யகர்மன்
சத்யபாமா
சத்ருக்னன்
சத்வதன்
சந்தனு
சந்திரன்
சந்திரவதி
சனத்குமாரர்
சன்னதி
சம்பரன்
சரஸ்வதி
சாணூரன்
சாத்யகி
சாந்தீபனி
சாம்பன்
சால்வன்
சிசுபாலன்
சித்திரலேகை
சித்திராங்கதன்
சிருகாலன்
சிவன்
சுக்ரன்
சுசீமுகி
சுநாபன்
சுனீதன்
சூரன்
சூரியன்
சைசிராயணர்
சௌதி
ஜனமேஜயன்
ஜனார்த்தனன்
ஜயந்தன்
ஜராசந்தன்
ஜஹ்னு
ஜாம்பவான்
ஜியாமோகன்
ஜ்வரம்
டிம்பகன்
தக்ஷன்
தசரதன்
தந்தவக்ரன்
தன்வந்தரி
தமகோஷன்
தரதன்
தாரை
திதி
திதிக்ஷு
திரிசங்கு
திரிவிக்ரை
திருமிலன்
திரையாருணன்
திலீபன்
திவோதாஸன்
துந்து
துந்துமாரன்
துருவன்
துர்வாசர்
துஷ்யந்தன்
தூம்ரவர்ணன்
தேனுகன்
தேவகன்
தேவகி
தேவாவ்ருதன்
நந்தன்
நந்தி
நரகாசுரன்
நரசிம்மன்
நஹுஷன்
நாரதர்
நாராயணன்
நாராயணி
நிகும்பன்
நிசுந்தன்
நித்ராதேவி
நீபன்
பஞ்சஜனன்
பத்மாவதி
பத்ரன்
பப்ரு
பயோதன்
பரசுராமர்
பரதன்
பரத்வாஜர்
பலராமன்
பலி
பாணன்
பானு
பானுமதி
பார்வதி
பிரதீபன்
பிரத்யும்னன்
பிரபாவதி
பிரமர்த்தனன்
பிரம்மதத்தன்
பிரம்மன்
பிரலம்பன்
பிரவரன்
பிரஸேனன்
பிரஹலாதன்
பிராசேதஸ்
பிராப்தி
பிருது
பிருதை
பிருஹதாஷ்வன்
பிருஹஸ்பதி
பீஷ்மகன்
பீஷ்மர்
புதன்
புரூரவன்
பூஜனி
பூதனை
பூமாதேவி
பூரு
பௌண்டரகன்
மதிராதேவி
மது
மதுமதி
மனு
மயன்
மஹாமாத்ரன்
மாயாதேவி
மாயாவதி
மார்க்கண்டேயர்
மித்ரஸஹர்
முசுகுந்தன்
முரு
முருகன்
முஷ்டிகன்
யசோதை
யது
யயாதி
யுதிஷ்டிரன்
ரஜி
ராமன்
ருக்மவதி
ருக்மி
ருக்மிணி
ரேவதி
ரைவதன்
ரோஹிணி
லவணன்
வசிஷ்டர்
வஜ்ரநாபன்
வராகம்
வருணன்
வஸு
வஸுதேவன்
வாமனன்
வாயு
விகத்ரு
விசக்ரன்
விதர்ப்பன்
விப்ராஜன்
விப்ருது
வியாசர்
விரஜை
விருஷ்ணி
விஷ்ணு
விஷ்வாசி
விஷ்வாமித்ரர்
விஷ்வாவஸு
விஸ்வகர்மன்
வேனன்
வைசம்பாயனர்
வைவஸ்வத மனு
ஸகரன்
ஸத்யபாமா
ஸத்யவிரதன்
ஸத்ராஜித்
ஸத்வான்
ஸஹஸ்ரதன்
ஸ்ரீதாமன்
ஸ்ரீதேவ
ஸ்வேதகர்ணன்
ஹம்சன்
ஹயக்ரீவன்
ஹரி
ஹரியஷ்வன்
ஹரிஷ்சந்திரன்
ஹிரண்யகசிபு
ஹிரண்யாக்ஷன்



















