(பீஷ்மகஸம்ஸதி க்ருஷ்ணேநாஶ்வாஸநம்)
Kaishika worships Krishna | Vishnu-Parva-Chapter-107-051 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிரதனும், கைசிகனும் தங்கள் அரசுகளைக் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தல்; இந்திரனின் விருப்பத்துடன் மன்னர்கள் அனைவரின் பேரரசனாகப் பட்டமேற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அனைவரையும் அமைதியடைச் செய்தது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! தலைவரே, தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கம்ஸனைக் கொன்ற பிறகும் கிருஷ்ணன் அரியணையில் அமரவில்லை.(1) அதன் பிறகு அவன் கன்னிகைக்காகக் காத்திருந்தான், அங்கும் அவன் வரவேற்கப்படவில்லை. இவ்வாறு அவமதிக்கப்பட்டாலும் அவன் ஏன் பொறுமையை வெளிப்படுத்தினான்?(2) வினதையின் மகன் {கருடன்} பெருஞ்சக்திவாய்ந்தவன். அவனும் ஏன் பொறுமையை வெளிப்படுத்தினான்? ஓ! பிராமணரே, இவை யாவையும் கேட்பதற்கு நான் பேராவல் கொண்டிருக்கிறேன். விரிவாக விளக்குவீராக" என்று கேட்டான்.(3)
