(யாதவோத்பத்தி தேஷாம் பராக்ரமாதிசம்)
The sons of Yadhu and their conquests | Vishnu-Parva-Chapter-94-038 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மன்னன் யதுவின் சந்ததி; மாஹிஷ்மதி, புரிகம், கரவீரம், கிரௌஞ்சம், மதுரா ஆகிய நகரங்கள் அமைந்த வரலாறு; யாதவர்களின் உட்பகை ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கு விளக்கிச் சொன்ன விகத்ரு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{விகத்ரு கிருஷ்ணனிடம் தொடர்ந்தான்} நீண்ட காலத்திற்குப் [பிறகு மன்னன் யது, நாக மன்னனின் அந்த ஐந்து மகள்களிடமும், நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், முசுகுந்தன்[1], பத்மவர்ணன், மாதவன், ஸாரஸன், ஹரிதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், தன் குலக் கொழுந்துகளுமான ஐந்து அரசமகன்களைப் பெற்றான்.(1,2) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்த மன்னன் {யது}, ஐம்பூதங்களைப் போன்ற அந்த ஐந்து மகன்களையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான்.(3)
