Showing posts with label ருக்மிணி. Show all posts
Showing posts with label ருக்மிணி. Show all posts

Wednesday, 6 October 2021

புத்திர பிரார்த்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 48

(கிருஷ்ணம் ப்ரதி ருக்மிண்யா꞉ புத்ரப்ரார்தநாகதநம்)

Rukmini asks Krishna for a son | Bhavishya-Parva-Chapter-48 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் பிள்ளை வரம் வேண்டிய ருக்மிணி; கைலாச மலையில் மஹாதேவனைச் சந்திக்கத் தீர்மானித்த கிருஷ்ணன்; பதரிகாசிரமத்தின் மகிமை...

Rumini and Krishna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஒரு காலத்தில் விஷ்ணுவும், தேவதேவனுமான பகவான் ஜனார்த்தனன், சங்கரனைச் சந்திக்கக் கைலாச மலைச் சிகரத்திற்குச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(1) தத்துவங்களில் சிறந்தவர்களும், தவச் சக்தி கொண்டவர்களுமான நாரதர் உள்ளிட்ட பெரும் தவசிகள் பலரும், செந்நீல வண்ணனான மஹாதேவனை தரிசிக்கச் சென்றனர்.(2) விப்ரரே, அங்கே நீண்ட காலத்திற்கு முன்பு கேசவன் உத்தம தவம் செய்து தேவதேவனான சங்கரனை அர்ச்சித்து வழிபட்டான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அங்கே ஆதி தேவர்களான அவ்விருவரும் {ஹரியும், சிவனும்} ஒருவரையொருவர் தரிசித்தனர். இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அங்கே சென்று சங்கரனையும், ஹரியையும் வழிபட்டனர்.(4)

Wednesday, 30 December 2020

கிருஷ்ணனின் சந்ததி | விஷ்ணு பர்வம் பகுதி – 160 – 104

(விருஷ்ணிவம்சவர்ணநம்)

Krishna's children | Vishnu-Parva-Chapter-160-104 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் குடும்பம்; பலதேவன், வசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரின் குடும்ப வம்சாவளி கூறப்படல்...


Krishna with his children

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கிருஷ்ணனின் பல்லாயிரம் மனைவியரில் எட்டுப் பெயர்களை முறையாகக் குறிப்பிட்டீர். அவர்களின் பிள்ளைகளைக் குறித்து இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Tuesday, 17 November 2020

அதிதி, சாவித்ரி, கங்கா, யாம விரதங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 138 – 082

(உமாவ்ரதகதநஸமாப்தி꞉)

Narada gives a history of vratas performed by other ladies | Vishnu-Parva-Chapter-138-082 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : உமை சொன்ன விரத விளக்கம் முடிவு; தேவதைகள் செய்த சாவித்ரி, அதிதி, கங்கா, யாம விரதங்கள்; கிருஷ்ணனின் மனைவிமாரான ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோர் செய்த விரதங்கள்...

Vishnu darshan to Aditi

உமை {அருந்ததியிடம்}, "திறன்மிக்க நண்பர்களையும், உறவினர்களையும் பெற விரும்பும் கற்புள்ள ஒரு பெண், ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு சப்தமியிலும் {வளர்பிறை ஏழாம் நாள், தேய்பிறை ஏழாம் நாள் ஆகியவற்றில்} உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(1) ஓராண்டு நிறைவடைந்ததும், பணக்கொடையுடன் சேர்த்து தங்கத்தாலான ஒரு மரத்தையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். அப்போது அவள் அறம்சார்ந்த நண்பர்களையும், உறவினர்களையும் பெறுவாள்.(2)

Saturday, 7 November 2020

புண்யக நோன்பின் வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078

(புந்யாகவிதி)

The history of the Punyaka rite | Vishnu-Parva-Chapter-134-078 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பின் வரலாறு குறித்து நாரதரிடம் கேட்ட ருக்மிணி; புண்யக நோன்பின் விதி குறித்து உமையிடம் கேட்ட அருந்ததி...

Narada Rukmini Satyabama Krishna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நீர் அனைத்தையும் எனக்குச் சொன்னீர். எனவே, புண்யக அறச்சடங்கின் தோற்றம் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Tuesday, 6 October 2020

ருக்மிணிக்குப் பாரிஜாதம் கொடுத்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 122 – 066

(பாரிஜாதநிபம்தநம் ஸத்யாகோபம்)

The present of the Parijata by Krishna to Rukshmini | Vishnu-Parva-Chapter-122-066 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாரதர் கொடுத்த பாரிஜாத மலர்; அதை ருக்மிணி அடைந்தது; ருக்மிணியைத் துதித்த நாரதர்; சத்யபாமாவின் பொறாமை...

Parijata tree and flower Indian postal stamp

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, மதுராவில் பிறந்த கிருஷ்ணனின்[1] மங்கல வரலாற்றை மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் என்னால் முழுமையான நிறைவை எட்ட முடியவில்லை.(1) மனைவியரை மணந்து கொண்டு துவாரகையில் வசித்தவனும், ஆறு குணங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் வரலாற்றை நீர் நன்கறிவீர். இப்போது எனக்கு அதைச் சொல்வீராக" என்று கேட்டான்[2].(2)

Thursday, 17 September 2020

கிருஷ்ணனைத் தாக்கி வீழ்ந்த ருக்மி | விஷ்ணு பர்வம் பகுதி – 117 – 061

(ருக்மிபராஜயம்)

Rukshmi attacks Krishna and is defeated | Vishnu-Parva-Chapter-117-061 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ருக்மிணியைத் திருமணம் செய்த கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் தோல்வியடைந்த ருக்மி; ருக்மிணியின் பிள்ளைகள்; கிருஷ்ணனின் திருமணங்கள்...

Krishna fighting

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ருக்மி, தன் தங்கை {ருக்மினி} கிருஷ்ணனால் கடத்தப்பட்டாள் என்பதைக் கேட்டதும், கோபத்தால் நிறைந்தவனாக, "கிருஷ்ணனைக் கொன்று, ருக்மிணியை மீட்காமல் நான் குண்டின நகரத்திற்கு {குண்டினபுரத்திற்குத்} திரும்பமாட்டேன்" என்று பீஷ்மகனின் முன்பு உறுதிமொழியேற்றான்.(1,2) வீரனான ருக்மி கோபத்தில் இதைச் சொல்லிவிட்டு, பயங்கர ஆயுதங்களும், கொடிகளும் நிறைந்த தேரில் ஏறினான். ஒரு பெரும்படை சூழ விரைவாக அவன் புறப்பட்டுச் சென்றான்.(3) பீஷ்மகனின் மகன்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், கிராதன், அம்சுமான், சுருதர்வன், வேணுதாரி ஆகியோரும், தக்காணத்தின் மன்னர்களும், கிரதக் கைசிகத்தைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(4,5)

Wednesday, 16 September 2020

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 116 – 060

(ருக்மிணீஹரணம்)

An account of Rukshmi: Krishna takes away Rukshmi | Vishnu-Parva-Chapter-116-060 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ருக்மிணியை அபகரித்துச் சென்ற கிருஷ்ணன்; ஜராசந்தனுடனும், சிசுபாலனுடனும் கடும்போர் செய்த யாதவர்கள்...

Krishna kidnaps Rukmini

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதேவேளையில் வலிமைவாய்ந்த ஜராசந்தன், சேதிகளின் மன்னனை நிறைவடையச் செய்யும் வகையில், "மன்னன் சிசுபாலனுக்கும், பீஷ்மகனின் மகளான ருக்மிணிக்கும் இடையில் பொன் நாணய, ஆபரணக் கொடைகளுடன் திருமணம் நடைபெறும்" என அறிவித்தான்.(1,2) பெரும் பலம்வாய்ந்தவனும், ஆயிரங்கண் தேவனைப் போன்று மாயைகளில் தேர்ந்தவனும், தந்தவக்ரனின் மகனுமான சுவக்தரன்,(3) பெருஞ்சக்தியும், வலிமையும் கொண்டவனும், ஓர் அக்ஷௌஹிணி படைவீரர்களின் தலைவனுமான சுதேவன், பௌண்ட்ர மன்னன் வாசுதேவனின் மகன்,(4) பெருஞ்சக்திவாய்ந்த ஏகலவ்யனின் மகன், பாண்டிய மன்னனின் மகன், கலிங்கத்தின் பலம்வாய்ந்த மன்னன்,(5) கிருஷ்ணனின் பகைவனான மன்னன் வேணுதாரி, அம்சுமான், கிரதன் சுருததர்மன்,(6) பகைவரைப் புறமுதுகிடச் செய்யும் காளிங்கன், காந்தார மன்னன், பெரும் வீரமிக்கவனான கௌசம்பியின் மன்னன்,(7) பெரும்படையுடன் கூடிய பகதத்தன், சலன், பலம்வாய்ந்தவனான சால்வன், பெரும்படையுடன் கூடிய பூரிஸ்ரவஸ், வீரனான குந்திவீர்யன் ஆகியோரையும் இதை ஆதரிக்குமாறு அவன் {ஜராசந்தன்} தூண்டினான்[1]" என்றார்.(8)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்