(தந்தவக்த்ரஸ்ய பாஷணம் பீஷ்மகஸ்ய நிர்ணயஶ்ச)
Dantavakra's speech | Vishnu-Parva-Chapter-106-050 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : தந்தவக்தரன், சால்வன் ஆகியோரின் பேச்சைக் கேட்டுக் கிருஷ்ணனின் பெருமையைக் கூறிய பீஷ்மகன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த சுனீதன் {தமகோஷன்} இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பிறகு, கரூஷ நாட்டு மன்னனான வீரன் தந்தவக்ரன் {தந்தவக்த்ரன் / தந்தவக்தரன்}[1],(1) "ஓ! மன்னர்களே, மகத மன்னனும் {ஜராசந்தனும்}, சுனீதனும் நம் நலத்திற்காகச் சொன்னவை முறையெனவே நான் நினைக்கிறேன்.(2) தீய எண்ணம், செருக்கு, வெற்றிக்கான விருப்பம் ஆகியவற்றால் இந்த அமுதச் சொற்களை என்னால் பழிக்க முடியாது.(3) குடிமையியலால் {நீதி சாத்திரங்களால்} அங்கீகரிக்கப்பட்டவையும் கடல்போன்றவையுமான இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சொற்களை இந்த மன்னர்களுக்கு மத்தியில் வேறு யாரால் சொல்ல முடியும்?(4)