(கம்ஸதனுர்பங்கம்)
Krishna's arrival | Vishnu-Parva-Chapter-82-027 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கம்ஸனின் வண்ணானைக் கொன்ற கிருஷ்ணன்; பூமாலை கட்டும் குணகன்; திரிவிக்ரையின் கூன் நிமிர்த்திய கிருஷ்ணன்; வில் ஒடித்த கிருஷ்ணன்; செய்தியை அறிந்த கம்ஸன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, தயாளக் கொடையாளியான அக்ரூரன், (குதிரைகளுடன்) தேரைப் பூட்டி, கிருஷ்ணனுடனும், ஸங்கர்ஷணனுடனும் {பலராமனுடனும்} புறப்பட்டுச் சென்று, கம்ஸனால் பாதுகாக்கப்பட்ட அழகிய மதுரா நகரினை அடைந்தான். மாலை வேளைக்கு முன் சூரியன் செவ்வண்ணம் ஏற்கும் போது அவன் அந்த அழகிய நகரத்திற்குள் நுழைந்தான்.(1,2)
