(கஷ்யபாதிந்ப்ரதி மஹாவிஷ்நோர்வரப்ரதாநகதாவதார꞉)
Vishnu promises help to the gods | Bhavishya-Parva-Chapter-44 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் :
பதிவின் சுருக்கம்: கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; விஷ்ணு கொடுத்த உறுதிமொழி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இருபிறப்பாளர்களில் முதன்மையான கசியபரால் ஓதப்படும் மிகச் சிறந்த துதிகளைக் கேட்ட தலைவன் நாராயணன்[1], மேகங்களுடைய முழக்கங்களின் மூலம் கம்பீரமான இனிய குரலில் அந்தப் பெருந் தேவர்களிடம் பேசினான்.{1,2} சொற்கள் வானத்தில் இருந்து கேட்டாலும், எவராலும் தலைவனைக் காணமுடியவில்லை. அந்த ஈஷ்வரன் பெரும் மகிழ்ச்சியுடன் பேசினான்.{3}(1-3)
[1] சித்திரசாலை பதிப்பில் இந்தத் துதி இருக்கிறது. இந்தத் துதி பாடப்படும் அத்தியாயம் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்காததால் மூல மொழியில் உள்ள அந்தத் துதி, தமிழில் ஒலிபெயர்க்கப்பட்டு இங்கே கொடுக்கப்படுகிறது:நமோ(அ)ஸ்து தேவதேவேஷ ஏகஷ்ருங்க வராஹ வ்ருஷார்சிஷவ்ருஷஸிந்தோ வ்ருஷாகபே ஸுரவ்ருஷப ஸுரநிர்மிதஅநிர்மித பத்ரகபில த்ருவ தர்ம தர்மராஜ வைகுண்டத்ரேதாவர்த அநாதிமத்யநிதந தநஞ்ஜய ஷுசிஷ்ரவ꞉அக்நிஜ வ்ருஷ்ணிஜ அஜ அஜயாம்ருதேஷய ஸநாதந விதாதஸ்த்ரிகாமத்ரிதாம த்ரிககுத் ககுத்மின் துந்துபே மஹாநாப லோகநாபபத்மநாப விரிஞ்சே வரிஷ்ட பஹுரூப விரூப விஷ்வரூபாக்ஷயாக்ஷரஸத்யாக்ஷர ஹம்ஸாக்ஷர ஹவ்யபுக் கண்டபரஷோ ஷுக்ரமுஞ்ஜகேஷ ஹம்ஸ மஹதக்ஷர ஹ்ருஷீகேஷ ஸூக்ஷ்மபரஸூக்ஷ்ம துராஷாட் விஷ்வமூர்தே ஸுராக்ரஜ நீல நிஸ்தமோவிரஜஸ்தமோரஜ꞉ஸத்த்வதாம ஸர்வலோகப்ரதிஷ்டஷிபிவிஷ்ட ஸுதபஸ்தபோக்ர அக்ர அக்ரஜா தர்மநாப கபஸ்திநாபதர்மநேம ஸத்யதாம ஸத்யாக்ஷர கபஸ்திநேமே விபாப்மன்சந்த்ரரத த்வமேவ ஸமுத்ரவாஸா꞉ அஜைகபாத் ஸஹஸ்ரஷீர்ஷஸஹஸ்த்ரஸம்மித மஹாஷீர்ஷ ஸஹஸ்ரத்ருக் ஸஹஸ்ரபாத்அதோமுக மஹாமுக மஹாபுருஷ புருஷோத்தம ஸஹஸ்ரபாஹோஸஹஸ்ரமூர்தே ஸஹஸ்ராஸ்ய ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபுஜஸஹஸ்ரபுவ ஸஹஸ்ரஷஸ்த்வாமாஹுர்வேதா꞉ || 3-68-1விஷ்வேதேவ விஷ்வஸம்பவ ஸர்வேஷாமேவ தேவாநாம் ஸௌபகஆதௌ கதி꞉ விஷ்வம் த்வமாப்யாயந꞉ விஷ்வம் த்வாமாஹு꞉ புஷ்பஹாஸபரமவரதஸ்த்வமேவ வௌஷட் ஓங்கார வஷட்காரம் த்வமேகமாஹுரக்ர்யம்மகபாகப்ராஷிநம் || 3-68-2ஷததார ஸஹஸ்ரதார பூர்த புவர்த ஸ்வர்த பூர்புவ꞉ஸ்வர்தத்வமேவ பூதம் புவநம் த்வம் ஸ்வதா த்வமேவ ப்ரஹ்மேஷயப்ரஹ்மமய ப்ரஹ்மாதிஸ்த்வமேவ || 3-68-3த்யௌரஸி ப்ருதிவ்யஸி பூஷாஸி மாதரிஷ்வாஸி தர்மோ(அ)ஸி மகவாஸிஹோதா போதா நேதா ஹந்தா மந்தா ஹோம்யஹோதா பராத்பரஸ்த்வம் ஹோம்யஹோதாத்வமேவ ||3-68- 4ஆபோ(அ)ஸி விஷ்வவாக் தாத்ரா பரமேண தாம்நா த்வமேவ திக்ப்ய꞉ ஸ்ருக்ஸ்ருக்பாண்ட த்வம் கண இஷ்டோ(அ)ஸி இஜ்யோ(அ)ஸி ஈட்யோ(அ)ஸி த்வஷ்டாத்வமஸி ஸமித்தஸ்த்வமேவ கதிர்கதிமதாமஸி மோக்ஷோ(அ)ஸியோகோ(அ)ஸி குஹ்யோ(அ)ஸி ஸித்தோ(அ)ஸி தந்யோ(அ)ஸி தாதாஸி பரமோ(அ)ஸியஜ்ஞோ(அ)ஸி ஸோமோ(அ)ஸி யூபோ(அ)ஸி தக்ஷிணாஸி தீக்ஷாஸி விஷ்வமஸி ||3-68-5ஸ்தவிஷ்ட ஸ்தவிர விஷ்வ துராஷாட் ஹிரண்யகர்ப ஹிரண்யநாபஹிரண்யநாராயண நாராயணாந்தர ந்ருணாமயந ஆதித்யவர்ணஆதித்யதேஜ꞉ மஹாபுருஷ ஸுரோத்தம ஆதிதேவ பத்மநாபபத்மேஷய பத்மாக்ஷ பத்மகர்ப ஹிரண்யாக்ரகேஷஷுக்லவிஷ்வதேவ விஷ்வதே முக விஷ்வாக்ஷ விஷ்வஸம்பவவிஷ்வபுக்த்வமேவ || 3-68-6பூரிவிக்ரம சக்ரக்ரம த்ரிபுவந ஸுவிக்ரம ஸ்வவிக்ரமஸ்வர்விக்ரம பப்ரு꞉ ஸுவிபு꞉ ப்ரபாகர꞉ ஷம்பு꞉ ஸ்வயம்பூஷ்சபூதாதி꞉ பூதாத்மன் மஹாபூத விஷ்வபுக்த்வமேவ விஷ்வகோப்தாஸிவிஷ்வம்பர பவித்ரமஸி ஹவிர்விஷாரத ஹவி꞉கர்மா அம்ருதேந்தநஸுராஸுரகுரோ மஹாதிதேவ ந்ருதேவ ஊர்த்வகர்மன் பூதாத்மன்அம்ருதேஷ திவ꞉ஸ்ப்ருக் விஷ்வஸ்ய பதே க்ருதாச்யஸிஅநந்தகர்மன் த்ருஹ்யநவம்ஷ ஸ்வவம்ஷ விஷ்வபாஸ்த்வம் த்வமேவவிஷ்வம் பிபர்ஷி வரார்திநோ நஸ்த்ராயஸ்வேதி || 3-68-7
விஷ்ணு, "ஓ! முன்னணி தேவர்களே, நான் உங்களிடம் நிறைவடைந்தேன். உங்களுக்கு நலம் விளையட்டும். வரங்களை வேண்டுவீராக. அவற்றை நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றான்.(4)
அப்போது கசியபர், "ஓ! அமரர்களே, தலைவன் நம்மிடம் நிறைவடைந்திருப்பதால் நாம் அருளப்பட்டவர்களாக இருக்கிறோம். எங்கள் பரம புகலிடம் நீயே,{5} ஓ! தலைவா, நீ எங்களிடம் நிறைவடைந்து வரங்கொடுக்க விரும்புகிறாயெனில், எனக்கும் அதிதிக்கும் மகனாக உன் உற்றார் உறவினரின் இன்பத்தை எப்போதும் அதிகரித்து வாசவனின் {இந்திரனின்} தம்பியாகப் பிறப்பாயாக" என்றார்".{6}
வைசம்பாயனர், "தேவர்களின் அன்னையான அதிதியும் வரம் வேண்ட விரும்பி அந்தத் தலைவனிடம்,{7} "நான் உன்னிடம் வரம் வேண்டுகிறேன். தேவர்கள் அனைவரின் நலத்துக்காக நீ என் மகனாகப் பிறப்பாயாக" என்றாள்.{8}(5-8)
தேவர்கள், "ஓ! தலைவா, நீ எங்கள் தம்பியும், தலைவனும், மன்னனும், பாதுகாப்பாளனும் ஆவாயாக. நீ அதிதியின் மகனாகப் பிறந்தால், வாசவனும், தேவர்கள் பிறரும் தேவனின் பெயரைக் கேட்கவல்லவராவோம். எனவே நீ கசியபரின் மகனாகப் பிறப்பாயாக" என்றனர்".(9)
வைசம்பாயனர், "அப்போது விஷ்ணு தேவர்களிடமும், கசியபரிடமும், "ஓ! தேவர்களே, உங்கள் எதிரிகளால் என் முன்னால் ஒரு கணமும் நிற்க இயலாது.{10} அசுரர்களையும், தேவர்களின் பகைவரான பிறரையும் கொன்று, நான் தேவர்களை மீண்டும் வேள்விக் காணிக்கைகளை ஏற்கச் செய்வேன்.{11} என்னுடைய படைப்பு சக்தியால் நான் தேவர்களை ஹவ்யத்தையும், பித்ருக்களைக் கவ்யத்தையும் உண்ணச் செய்வேன். எனவே, ஓ! தேவர்களே, நீங்கள் வந்த வழியே செல்வீராக.{12,13} தேவர்களின் அன்னையான அதிதியின் விருப்பத்தையும், பெரும் கசியபரின் விருப்பத்தையும் நான் நிறைவடையச் செய்வேன். நீங்கள் அவரவருக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வீராக. உங்களுக்கு நன்மை நேரட்டும், விரும்பிய நோக்கங்களை நீங்கள் அடைவீராக" என்றான்".(10-14)
வைசம்பாயனர், "பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவால் இவ்வாறு சொல்லப்பட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியாக அந்தத் தலைவனை வழிபட்டனர்.(15) விஷ்வதேவர்கள், கசியபர், அதிதி, சாத்யர்கள், மருத்துகள், பெருஞ்சக்திவாய்ந்த இந்திரன் ஆகியோர் அந்தத் தேவனை வணங்கிவிட்டு,{16} கிழக்குத் திக்கில் உள்ள கசியபரின் பெருங்குடிலுக்குச் சென்றனர்.
பிரம்மரிஷிகளால் நிறைந்த அந்தக் குடிலை {கசியபாஷ்ரிமத்தை} அடைந்ததும் அவர்கள் வேத கல்வியில் ஈடுபட்டு அதிதியின் கருத்தரிப்புக்காகக் காத்திருந்தனர்.{17} தேவர்களின் அன்னையான அதிதி, பெருஞ்சக்தி வாய்ந்த அண்ட ஆன்மாவான அந்தப் பரமனை ஆயிரம் தேவ வருடங்கள் தன் கருவறையில் கொண்டிருந்தாள்.{18} ஆயிரமாவது வருடம் நிறைவடைந்ததும் தேவர்களைப் பாதுகாப்பவனும், அசுரர்களை அழிப்பவனுமான மகனை அவள் பெற்றெடுத்தாள்.{19} அந்தத் தலைவன் கருவறையில் வாழ்ந்தபோது மூவுலகங்களின் சக்தியை ஈர்த்துத் தேவர்களைக் காத்தான். தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் இன்பமும்,{20} தைத்தியர்களின் அச்சமும், தேவர்களின் மகிழ்ச்சிய அதிகரிப்பவனுமான அந்தத் தலைவன் பிறந்தபோது தேவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டனர்" என்றார் {வைசம்பாயனர்}.(15-21)
பவிஷ்ய பர்வம் பகுதி – 44ல் உள்ள சுலோகங்கள் : 21
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |