Friday 17 February 2023

சுவடுகளைத் தேடி - பவிஷ்ய பர்வம்

Lord Krishna

ஹரிவம்சத்தின் இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம் வரை பல்வேறு பதிப்புகளை ஒப்புநோக்க முடிந்தது. ஆனால் பவிஷ்ய பர்வம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் ஹரிவம்ச பதிப்பு விஷ்ணு பர்வத்தை மட்டுமே கொண்டிருப்பதாலும், பிபேக்திப்ராயின் பதிப்பு செம்பதிப்பாகையால் பவிஷ்ய பர்வத்தின் பெரும்பகுதி தவிர்க்கப்பட்டிருப்பதாலும், பவிஷ்ய பர்வத்திற்கான நமது மொழிபெயர்ப்பின் ஒப்புநோக்குதலுக்கு அப்பதிப்புகளைப் பயன்படுத்த முடியவில்லை. சித்திரசாலை பதிப்பை ஒட்டி தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் கிடைக்கும் பதிப்பில் பவிஷ்ய பர்வத்தில் நான்கு அத்தியாயங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பவிஷ்ய பர்வத்தின் 135 அத்தியாயங்களுக்கான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அங்கே முழுமையாகக் கிடைக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் பவிஷ்ய பர்வத்தில் மொத்தம் 48 அத்தியாயங்கள் மட்டுமே இருக்கின்றன. இங்கே நாம் மொழிபெயர்த்திருக்கும் பவிஷ்ய பர்வத்தின் 110 அத்தியாயங்களில், முதல் 46 அத்தியாயங்களும், இறுதியில் 2 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பைக் கொண்டு செய்யப்பட்டன. எஞ்சிய 62 அத்தியாயங்கள் சுவாமி ஏ.ஜி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் International Society for Krishna Consiousness வெளியீட்டில் வந்த திரு.பூமிபதி தாசரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் துணை கொண்டு செய்யப்பட்டது. 

Bhavishya Parva wrapper

பவிஷ்ய பர்வத்தின் 37ம் அத்தியாயத்தில் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாத மற்றொரு அத்தியாயம் 37அ என்ற தலைப்பிட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. அதே போல 38ம் அத்தியாயத்தில் 38அ, 38ஆ, 38இ என்ற மூன்று அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, நம் பதிப்பின் பவிஷ்ய பர்வ பொருளடக்கத்தை வெளிப்படையாகப் பார்க்க 110 அத்தியாயங்களைக் கொண்டதாகத் தெரிந்தாலும், உண்மையில் 114 அத்தியாயங்களும், 3866 சுலோகங்களும் இருக்கின்றன. சித்திரசாலை பதிப்பில் பவிஷ்ய பர்வம் 135 அத்தியாயங்களைக் கொண்டதாகும். அவற்றில் 21 அத்தியாயங்கள் நம் பதிப்பில் விடுபட்டிருக்கும். முதல் 46 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டி செய்தபோது, இந்த 21 அத்தியாயங்கள் விடுபட்டன. 37ம் அத்தியாயத்தில் இருந்து தொடங்கும் நரசிம்ம அவதாரம் முதல் 44ம் அத்தியாயம் வரையுள்ள பகுதிகளுக்கிடையிலேயே இந்த அத்தியாயங்கள் அனைத்தும் விடுபட்டிருக்கின்றன. அந்த அத்தியாயங்கள் முழுவதும் தேவாசுரப் போரை வர்ணிப்பனவாக உள்ளன. மன்மதநாததத்தர் இதற்கடுத்து வரும் வாமனாவதாரத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார். நரசிம்மாவதாரத்தில் வரும் அந்தக் குறிப்பிட்ட 21 அத்தியாயங்களையும் அவர் தவிர்த்திருப்பதால், இங்கும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 47ம் அத்தியாயத்தில் பிறகு வருவனவற்றில் இறுதியான 2 அத்தியாயங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மன்மதநாததத்தர் தவிர்த்திருந்தாலும் இங்கே சேர்க்கப்பட்டிருப்பது ஏனென்றால், மஹாபாரத நாயகர்களுக்குத் தலைவனான கிருஷ்ணனைக் குறித்த செய்திகளாக அவை இருப்பதனால்தான். 

பவிஷ்ய பர்வத்தின் தொடக்கத்தில், பிரபஞ்சப் படைப்பின் கதை வேறு கோணத்தில் சொல்லப்படுகிறது. பிராணாயாமச் செயல்முறை, பிருதுவின் கதை, தக்ஷன் வேள்வி, வராஹ அவதாரம், வேதங்களின் படைப்பு ஆகியவையும்,  நரசிம்ம அவதாரம் முற்றிலும் வேறு வகையிலும் சொல்லப்படுகின்றன. அடுத்ததாக வாமன அவதாரம் குறித்துச் சொல்லப்படுகிறது. பவிஷ்ய பர்வத்தின் 48ம் அத்தியாயம் முதல் துவாரகையில் கிருஷ்ணனின் இளமைக் காலம் விவரிக்கப்படுகிறது. அதில் புத்திரப்பேறுக்காக கைலாசத்தில் கிருஷ்ணன் தவமிருந்தது, கண்டாகர்ணன் என்ற பிசாசு முக்தியடைந்தது, விஷ்ணுவின் சிவத்துதி, சிவனின் விஷ்ணு துதி ஆகியவை இருக்கின்றன. மேலும் விஷ்ணுபுராணம், பாகவதம் போன்றவற்றில் வரும் பௌண்டரகன், ஹம்சன், டிம்பகன், விசக்ரன் ஆகியோரைக் குறித்தும், மிக முக்கியமாக ஏகலவ்யனின் மறைவு குறித்தும் குறிப்புகள் இருக்கின்றன.

2021ம் ஆண்டு பங்குனி உத்திரத்தன்று (28.3.2021) அன்று தொடங்கப்பட்ட பவிஷ்ய பர்வ மொழிபெயர்ப்பு ஜூலை 9, 2021 அன்று மன்மதநாததத்தரின் 48 அத்தியாயங்களோடு முடிவடைந்தது. அடுத்ததாக ஜூலை 19, 2021 அன்று இராமாயண மறு ஆக்கமும் தொடங்கப்பட்டது. இருப்பினும் பவிஷ்ய பர்வம் நிறைவடையாததைப் போன்ற உணர்வே ஆதிக்கம் செலுத்தி வந்தத்தால், ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டம் நிறைவடையும் முன்பே, மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாத பவிஷ்ய பர்வப் பகுதிகளையும் மீண்டும் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அக்டோபர் 6, 2021 முதல் ஒருநாள் ராமாயணத்தின் ஒரு சர்க்கத்தை மறு ஆக்கம் செய்தால், அடுத்த நாள் பவிஷ்ய பர்வத்தில் ஓர் அத்தியாயத்தை மொழிபெயர்ப்பதெனத் தீர்மானித்து மெல்ல மெல்ல பவிஷ்ய பர்வத்தையும் மொழிபெயர்த்து வந்தேன். டிசம்பர் 5, 2021ல் ராமாயணத்தின் பாலகாண்டம் நிறைவடைந்ததும், ராமாயண மறு ஆக்கத்தை சற்றே நிறுத்தி வைத்துவிட்டு, ஹரிவம்ச பவிஷ்ய பர்வத்தை முழுமூச்சாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவ்வாறே தொடர்ந்து செயல்பட்டு பவிஷ்ய பர்வத்தின் இறுதி அத்தியாயத்தை மார்ச் 2, 2022 அன்று மொழிபெயர்த்து நிறைவடைந்தேன். பிப்ரவரி 8, 2020ல் தொடங்கப்பட்ட ஹரிவம்ச மொழிபெயர்ப்பு இவ்வாறே நிறைவடைந்தது.

ஹரிவம்சம் முதல் பர்வத்தில் 55 அத்தியாயங்களும், 3,119 சுலோகங்களும் இருக்கின்றன. இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வத்தில் 132 அத்தியாயங்களும், 7,787 சுலோகங்களும் இருக்கின்றன. மூன்றாம் பர்வமான பவிஷ்ய பர்வத்தில் 110 அத்தியாயங்களும் {சரியாகச் சொன்னால் 114 அத்தியாயங்களும்}, 3,866 சுலோகங்களும் இருக்கின்றன. ஆக மொத்தம் ஹரிவம்சம் முழுமையாக 297 அத்தியாயங்களும் {சரியாகச் சொன்னால் 301 அத்தியாயங்களும்}, 14,772 சுலோகங்களும் கொண்ட பதிப்பாக அமைந்திருக்கிறது. 


பவிஷ்ய பர்வத்தின் இறுதி அத்தியாயமான ஹரிவம்ச பலன்களில் 110:5, "கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் ஹரிவம்சத்தை அறிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்" என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அரிதினும் அரிதான படைப்பை தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஐயம் எழும் இடங்கள் அனைத்திலும் எனக்குப் பேருதவியாக இருந்த பதிப்புகளைச் செய்த மன்மதநாததத்தர், தேசிராஜு ஹனுமந்த ராவ், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார், பிபேக்திப்ராய், பூமிபதி தாசர் ஆகியோரை என் குருக்களாக பாவித்துத் தொழுகிறேன். பதிவுகளை இட்ட உடனுக்குடன் திருத்தம் செய்து உதவிய நண்பர் உ.ஜெயவேலன் அவர்களுக்கும், தள்ளாத வயதிலும் சொல் சொல்லாக, வரி வரியாகப் படித்து, சொற்பிழைகளையும், சொற்றொடர் பிழைகளையும் சுட்டிக் காட்டிய என் சித்தி திருமதி.நா.பிரபா அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்த பரமனை உளமாறப் போற்றித் துதிக்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202302171232

Wednesday 2 March 2022

ஹரிவம்சப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 110

(ஹரிவம்ஷ²ஷ்²ரவணப²லம் மபா⁴ராதஸமாப்திஷ்²ச)

The fruits of the recitation of Harivamsha| Bhavishya-Parva-Chapter-110 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிவம்சம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; ஹரிவம்சம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்...

Vyasa and Vishampayana in Janamejaya's sacrice

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்களையும், அவன் கொடுக்க வேண்டிய கொடைகளையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.{1}

THE FRUITS OF THE RECITATION OF HARIVAMSHA | BHAVISHYA PARVA SECTION - 49

CHAPTER LXIX

(THE FRUITS OF THE RECITATION OF HARIVAMSHA)

Vyasa and Vishampayana in Janamejaya's sacrice

Janamejaya said:—O foremost of Munis, do you describe to me the fruits one can acquire by listening to Harivamsha and what gifts he should make.

ஹரிவம்ஷ²ஷ்²ரவணப²லம் மபா⁴ராதஸமாப்திஷ்²ச | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 135 (107)

அத² பஞ்சஸ்த்ரிம்ஷத³தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

ஹரிவம்ஷ²ஷ்²ரவணப²லம் மபா⁴ராதஸமாப்திஷ்²ச

Vyasa and Vishampayana in Janamejaya's sacrice

ஜநமஜய உவாச 
ஹரிவம்ஷே² புராணே து ஷ்²ருதே முநிவரோத்தம |
கிம் ப²லம் கிம் ச தே³யம் வை தத்³ப்³ரூஹி த்வம் மமாக்³ரத꞉ ||3-135-1

வைஷ²ம்பாயந உவாச
ஹரிவம்ஷே² புராணே து ஷ்²ருதே ச ப⁴ரதோத்தம |
காயிகம் வாசிகம் சைவ மநஸா ஸமுபார்ஜிதம் ||3-135-2

தத்ஸர்வம் நாஷ²மாயாதி ஹிமம் ஸூர்யோத³யே யதா² |
அஷ்டாத³ஷ²புராணாநாம் ஷ்²ரவணாத்³யத்ப²லம் ப⁴வேத் ||3-135-3

தத்ப²லம் ஸமவாப்நோதி வைஷ்ணவோ நாத்ர ஸம்ஷ²ய꞉ |
ஷ்²லோகார்த⁴ம் ஷ்²லோகபாத³ம் வா ஹரிவம்ஷ²ஸமுத்³ப⁴வம் ||3-135-4

ஷ்²ருண்வந்தி ஷ்²ரத்³த⁴யா யுக்தா வைஷ்ணவம் பத³மாப்நுயு꞉ |
ஜம்பு³த்³வீபம் ஸமாஷ்²ரித்ய ஷ்²ரோதாரோ து³ர்லபா⁴꞉ கலௌ ||3-135-5

ஹரிவம்சம் பொருளடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 109

(ஹரிவம்ஷவ்ருத்தாந்தஸங்க்ரஹம்)

Contents of Harivamsha | Bhavishya-Parva-Chapter-109 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிவம்சத்தின் பொருளடக்கம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது...

Harivamsam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இனி, நாம் விவாதித்த ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தைச் சுருக்கமாக நினைவுகூர்கிறேன்.

{1. ஹரிவம்சபர்வம்}

தொடக்கத்தில் வரும் ஹரிவம்ச பர்வத்தில் அண்டத்தின் அடிப்படை படைப்பு விளக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூதங்களின் படைப்பும் விளக்கப்பட்டது.(1) வேனனின் மகன் பிருதுவின் கதை சொல்லப்பட்டது. அதன்பின் வைவஸ்வத மனுவின் குலத்தில் வந்த மனுக்கள் விளக்கப்பட்டனர். துந்துமாரன் கதையும் விளக்கப்பட்டது.(2) காலவரின் தோற்றம், இக்ஷ்வாகு குல விளக்கம், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி காணிக்கைகளின் விளக்கம், சோமன் கதை, புதன் கதை ஆகியனவும் சொல்லப்பட்டன.(3)

ஹரிவம்ஷ²வ்ருத்தாந்தஸங்க்³ரஹ꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 134 (31)

அத² சதுஸ்த்ரிம்ஷத³தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

ஹரிவம்ஷ²வ்ருத்தாந்தஸங்க்³ரஹ꞉

Harivamsam


(1)

வைஷ²ம்பாயந உவாச 
ஹரிவம்ஷே²(அ)த்ர வ்ருத்தாந்தா꞉ ப்ரகீர்த்யந்தே க்ரமோதி³தா꞉ |
தத்ராத்³யமாதி³ஸர்க³ஸ்து பூ⁴தஸர்க³ஸ்தத꞉ பர꞉ ||3-134-1

ப்ருதோ²ர்வைந்யஸ்ய சாக்²யாநம் மநூநாம் கீர்தநம் ததா² |
வைவஸ்வதகுலோத்பத்திர்து⁴ந்து⁴மாரகதா² ததா² ||3-134-2

கா³லவோத்பத்திரிக்ஷ்வாகுவம்ஷ²ஸ்யாப்யநுகீர்தநம்  |
பித்ருகல்பஸ்ததோ²த்பத்தி꞉ ஸோமஸ்ய ச பு³த⁴ஸ்ய ச ||3-134-3

அமாவஸோரந்வயஸ்ய கீர்தநம் கீர்திவர்த⁴நம் |
ச்யுதிப்ரதிஷ்டே² ஷ²க்ரஸ்ய ப்ரஸவ꞉ க்ஷத்ரவ்ருத்³த⁴ஜ꞉ ||3-134-4

தி³வோதா³ஸப்ரதிஷ்டா² ச த்ரிஷ²ங்கோ꞉ க்ஷத்ரியஸ்ய ச |
யயாதிசரிதம் சைவ புருவம்ஷ²ஸ்ய கீர்தநம் ||3-134-5

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108

(திரிபுரவதவ்ருத்தாந்தம்)

Tripura annihilated | Bhavishya-Parva-Chapter-108 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது...

Shiva in chariot and vishnu as bull

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்