Saturday 30 October 2021

விஷ்ணுஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 57

(கண்டாகர்ணக்ருதோ விஷ்ணுஸ்தவம்)

Vishnustavah | Bhavishya-Parva-Chapter-57 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: தன் முன் அமர்ந்திருக்கும் ஜகத்பதியான விஷ்ணுவைக் கண்டு துதித்து விஷ்ணுஸ்தவத் துதியைச் சொன்ன கண்டாகர்ணன்...

Vishnu Avatars

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   "அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தியானத்தில் கண்ட ஜகத்குருவே, இப்போது தன்னெதிரில் ஜனார்த்தனனாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) அப்போது அந்தப் பிசாசானவன், "இதோ விஷ்ணு. இதே வடிவத்தையே இவன் என் தியானத்தில் வெளிப்படுத்தினான்" என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கூத்தாடினான்.(2)

பிறகு அவன் {கண்டாகர்ணன்}, "சக்கரம், சரங்கள், சாரங்க தனு {வில்}, கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனும், அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்திருப்பவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் புகலிடமும், அண்டத்தைப் படைத்தவனுமான ஹரி இவனே.(3) எப்போதும் வெல்பவனும் {ஜிஷ்ணுவும்}, அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, புராணனும், அண்டத்தின் ஆன்மாவும், வெளிப்பட்டிருக்கும் இந்த அண்டத்தின் படைப்பாளனுமான விஷ்ணு இவனே.(4) இதோ ஹரிதேவனின் மார்பில் கௌஸ்துப ரத்தினம் மிளிர்கிறது. முழு நிலவால் ஒளியூட்டப்படும் ராத்திரியைப் போலவே இந்த அண்டமும் இவனால் ஒளியூட்டப்படுகிறது.(5)

{கார்போடகக் கடலில்} ஜலத்தின் அடியிலிருந்து பிருத்வியைத் தன் தந்தங்களில் உயர்த்தி உரிய இடத்தில் நிலைநிறுத்திய வராஹன் இவனே. சாக்ஷாத் ஹரி இவனே.(6) வலிமைமிக்கவனும், தானவர்களின் மன்னனுமான பலியை பலவந்தமாகக் கட்டிப்போட்டு, இந்திரனிடம் மூவுலகங்களையும் திருப்பி அளித்த வாமனன் இவனே. அந்நேரத்தில் பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்டவன் இந்த ஹரியே.(7) கோரப்பற்களையுடைய நரசிம்மனாக அவதரித்து தானவர்களைக் கொன்று ஓலத்திலிருந்து அண்டத்தை விடுவித்தவன் இந்த ஜனார்த்தனனே.(8) ஆதிகாலத்தில் மந்தர மலையை ஒரு கையில் பிடித்து, பெருங்கடலின் கரையில் தானவர்கள் அனைவரையும் வீழ்த்திய அந்த மஹாவிஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(9) அண்டம் அழிந்ததும் லக்ஷ்மி தேவியுடன் அநந்த சேஷ படுக்கையில் கிடந்து, மது, கைடபன் என்ற வலிமைமிக்க தானவர்கள் இருவரைக் கொன்றவன் இந்த ஹரியே.(10)

அனைத்தின் பிறப்பிடம், ஜகத்பதி, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன், பிறப்பற்றவன், அனைவரின் ஐயன், அணுவைவிடச் சிறியவன், பெரிதிலும் பெரியவன் என்றெல்லாம் தேவர்களால் துதிக்கப்படுபவன் இந்த விஷ்ணுவே.(11) அழிவிற்குப் பின் மொத்த படைப்பும் எவனில் கரையுமோ, படைப்பின் தொடக்கத்தில் எவனிடமிருந்து அது {மொத்த படைப்பும்} வெளிப்படுமோ அந்த விஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(12) எவனுடைய விருப்பத்தினால் மூவுலகங்களும் தங்கள் கடமைகளில் ஈடுபடுமோ அந்த மங்கலவிஷ்ணுவும் யாதவேஷ்வரனும், புருஷோத்தமனுமான இந்த ஜனார்த்தனனும் ஒருவனே.(13)

மிருகவியாதன் என்ற பெயரில் ருத்ரனின் சீடனாகி, ஆயிரங்கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜுனனைப் பெரும்போரில் கொன்று, அவனது யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றையும், படைவீரர்களையும் தம் கோடரியால் அழித்து, குருக்ஷேத்திரம் சென்று தம் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்து, இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாக்கிய அந்தப் பிருகுவம்சத்து ஜமதக்னேயரே {ஜமதக்னியின் மகனான பரசுராமரே} இப்போது என் முன் இருக்கிறார்.(14-16) ரகு குலத்தில், ராமன் என்ற பெயரில் பிறந்து, ஸ்ரீதேவியான சீதையை மணந்து, எப்போதும் தம்பி லக்ஷ்மணனின் துணையுடன் கூடியவனாக, கடலில் பாலம் அமைத்து, தன் கணைகளால் ராக்ஷசாதிபதியை {ராவணனைக்} கொன்று, அந்த ராஜ்ஜியத்தை விபீஷணனுக்கு அளித்து, பத்து அஷ்வமேத யாகங்களைச் செய்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(17,18)

வசுதேவன் குலத்தில் பிறந்து, வாசுதேவன் என்று அறியப்பட்டு, கோகுலத்தில் குழந்தைப் பருவத்தைக் கழித்து, எப்போதும் அண்ணன் பலராமனின் துணையுடன் இருந்தவனும் இந்த ஹரியே.(19) குழந்தையாகப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கையில் கொல்ல வந்த பூதனையின் நஞ்சு பூசிய முலைப்பால் பருகி அவளது உயிரையும் உறிஞ்சியெடுத்து அமைதியாகப் படுக்கையில் கிடந்தவன் இவனே.(20) சற்றே வளர்ந்ததும், வெண்ணெய்யையும், தயிரையும் எடுத்து மறைந்திருந்து உண்டவன் இவனே. கோபமடைந்த அன்னை யசோதை இவனது இடையில் கயிற்றைக் கட்டினாள்.(21) அன்னையால் உரலில் இறுக்கமாகக் கட்டப்பட்டு, அந்த உரலையும் இழுத்துச் சென்று அர்ஜுன மரங்கள் இரண்டை வேரோடு பிடுங்கிய அந்த தாமோதரன் இவனே. கோகுலத்தில் குழந்தையாக இருந்து, சில வேளைகளில் அசுரர்களைக் கொன்று, சில வேளைகளில் கோபியரின் முலைப்பால் பருகியவன் இந்த ஹரியே.(22) கோபர்களுடன் பிருந்தாவனத்தில் வசித்துவந்த போது சூரியனைப் போன்ற பிரகாசமான குதிரை வடிவத்தில் இருந்த கேசியைக் கொன்றவன் இந்த விஷ்ணுவே.(23) கோபாலர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் நாகமுடியில் நாட்டியமாடி, யமுனை மடுவில் நாக மன்னனை {காளியனை} தண்டித்த அந்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(24)

தாலவனக்காட்டில் கோபாலர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பனை மரத்தின் உச்சியில் இருந்து தானவனை {தேணுகனை} வீசி எறிந்த தலைவனே இப்போது என் முன் இருக்கிறான்.(25) விரஜம் முழுவதையும் மறைத்து இடையறாமல் மேகக்கூட்டங்கள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தபோது, ஒப்பற்ற பலத்தை வெளிப்படுத்தி ஒரு கையால் கோவர்த்தன மலையை உயர்த்தி, சக்ரனின் பலத்தைப் பரிகசித்து, கோபர்கள், கோபிகைகள் ஆகியோருக்கும், கோகுலத்தின் பசுக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தவன் இந்த ஹரியே.(26) அக ஆற்றலால் மனித வடிவை ஏற்று, கோபிகைகளின் ஸ்தனங்களுக்கு மத்தியில் கிடந்து, விருப்பத்துடன் அவர்களின் இதழ்களைப் பருகிய அந்தக் காமேஷ்வரனே இப்போது என் முன் இருக்கிறான்.(27) பிருந்தவனத்தின் தனிமையான இடத்தில் இரவில் தாமரை போன்ற முகங்களைக் கொண்ட கோபிகைகளின் இதழமுதமருந்தி, அவர்களின் மார்பில் தன் தலைசாய்த்தவன் இந்தக் கேசவனே.(28)

நாகலோகவாசிகளால் வழிபடப்பட்ட கம்சனின் ஆணையின் பேரில் {பிருந்தாவனம்} சென்று மதுராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அக்ரூரருக்கு யமுனையின் நீரில் வைகுண்டத்தைக் காட்டிய கிருஷ்ணன் இவனே.(29) மதுராவின் தெருக்களில் பலராமனுடன் நடந்து கொண்டிருந்தபோது, ஆணவம் மிகுந்த வண்ணான் ஒருவனைக் கொன்று அவனிடம் இருந்து உடைகளைப் பறித்து உடுத்திச் சென்றவன் இந்த ஹரியே.(30) மதுராவில் திரிந்தபோது மலர்வியாபாரியால் கொடுக்கப்பட்ட மலர்மாலைகளை அணிந்து கொண்டு, அவன் விரும்பிய வரத்தை அளித்து, குப்ஜை {கூனி} கொடுத்த சந்தனக் குழம்பைப் பெற்றுக் கொண்டு அவளை அழகிய பெண்ணாக்கிய தலைவன் இவனே.(31) கம்சனின் தெய்வீக வில்லை எடுத்து, அதை இரண்டாக முறித்து, பிரளயகால மேகங்களைப் போல முழங்கி நின்றவன் இவனே.(32)

மற்போர் அரங்கின் நுழைவாயிலில் குவலயபீடம் என்ற பெரும் யானையைக் கொன்று, அதன் தந்தங்களைப் பிடுங்கி மற்போர் அரங்கில் தரித்துக் கம்சனை அச்சுறுத்திய கேசவன் இவனே.(33) வலிமைமிக்க மாமல்லன் சாணூரனை கம்சன் முன்னிலையில் கொன்று, யாதவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த ஹரியே இங்கே இருக்கிறான்.(34) தந்தையிடமும், யாதவர்களிடமும் பகைமை பூண்டிருந்த கம்சனைக் கொன்று, மதுராவின் மன்னராக உக்ரசேனரை நிறுவி, காசியப குலத்தைச் சேர்ந்த சாந்தீபனி முனிவரிடம் குருகுல கல்வி பயிலச் சென்ற ஹரி இவனே.(35) கல்வி நிறைவடைந்ததும், இறந்து போன தன் குருபுத்திரனை மீட்டளித்து, யாதவர்களின் தலைநகரான மதுராவுக்குத் தன் தமையனுடன் திரும்பி வந்த தலைவன் இவனே.(36) நிசும்பனையும், நரகனையும் கொன்று, பூமியின் சுமையைக் குறைத்து, வழியில் பிராமணர்கள், முனிவர்கள், ராஜரிஷிகள் ஆகியோரைக் காத்தவனும், நுண்ணறிவுமிக்க ஜகத்பதியுமான அந்த ஜனார்த்தனன் இவனே.(37)

இதோ என் கண்களுக்கு முன் இருப்பவன் அந்த விஷ்ணுவே. நான் ஸாயுஜ்ய முக்தியை அடைந்திருப்பதால் நிச்சயம் இவனது தரிசனமே என் வாழ்வை மகிமையடையச் செய்திருக்கிறது.(38) சாக்ஷாத் ஹரியை நேரடியாகக் கண்ட எவனும் நிச்சயம் முக்தியடைவான். இப்போது என் முன் இருப்பவன் சாக்ஷாத் அந்த ஹரியே.(39) முற்பிறவிகளில் நான் பெரும்புண்ணியங்களைச் சேர்த்திருப்பதாலேயே இப்போது இவனது தரிசனத்தை அடைகிறேன்.(40) எனக்கிருந்த பொருள் பற்று அழிவடைந்ததால், நானே மிகப் புண்ணிய ஆத்மாவாவேன். நான் இவனுக்கு என்ன கொடுப்பது? இவனிடம் என்ன சொல்வது? ஓ! விஷ்ணுவே, நான் எவ்வாறு உனக்குத் தொண்டாற்ற வேண்டும்? உன்னை நிறைவடையச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றான் {கண்டாகர்ணன்}".(41)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வாறு பேசிய அந்தப் பிசாசானவன் உரக்க கதறி அழுதான். பிறகு அவன் சிரித்தபடியே கட்டுப்பாடில்லாமல் மகிழ்ச்சிக் கூத்தாடினான்.(42) கிருஷ்ணனின் முன்னிலையில் அவன், "ஓ! யாதவேஷ்வரா, ஓ! கிருஷ்ணா, ஓ! கேசவா, ஓ! ஹரியே, என் வழிபாடுகளையும் வணக்கத்தையும் ஏற்பாயாக" என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆடத் தொடங்கினான்".(43) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 43

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்