பக்கங்கள்: 558 கிண்டில் பக்கங்கள்
விலை: ₹ 280.00
விலைக்கு வாங்க: https://bit.ly/hv1-harivamsha-parva என்ற சுட்டிக்குச் செல்லவும்
ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும். விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகிய இருபெரும் குலங்களின் கதையைச் சொல்லுமாறு சௌதியிடம், சௌனகர் வைக்கும் வேண்டுகோளுடன் இந்தப் படைப்புத் தொடங்குகிறது.
சிறந்த அரசியல்வாதியாகவும், சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவனாகவும் கிருஷ்ணன் இருந்தான். மனிதர்களின் வரலாற்றில் இத்தகைய கலவை மிக அரிதானதாகும். கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் குருக்ஷேத்திரப் போர் வரலாற்று நிகழ்வாக இருந்தால், மைய வடிவம் ஏன் வரலாற்றுப் பாத்திரமாக இருக்கக்கூடாது என்பதை நாம் காணத் தவறுகிறோம்.
உயர்ந்த அறக்கருத்துகள் நிறைந்த அவனது வாழ்க்கை நம் முன்னோர்களின் மகத்துவத்தை இன்னும் மிகப் பிரகாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள கோடிக்கணாக்கான மக்களை மட்டும் அவனது போதனைகள் ஆளவில்லை, மாறாக மேற்கத்திய மக்களாலும் போற்றப்பட்டு, மதிக்கப்படுகின்றன.
ஹரிவம்சம், இந்துக்களின் பெருந் தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் சொல்கிறது.
- மன்மதநாததத்தர்
1897
தொடக்க கால படைப்பு, மனிதர்களின் தோற்றம், உணவுப் பொருட்களின் தோற்றம், மன்வந்தரங்கள், காலப்பிரிவினைகள், சூரிய மற்றும் சந்திர வம்சம் பற்றிய குறிப்பு ஆகியவற்றுடன் ஹரிவம்ச பர்வத்தின் தொடக்க அத்தியாயங்கள் தொடங்குகின்றன. 1832ல் ஹென்றி டேவிட் தொர்யோ Henry David Thoreau என்ற அமெரிக்க அறிஞர், "ஏழு பிராமணர்களின் புலம்பெயர்வு The Transmigration of the Seven Brahmans" என்ற தலைப்பில் ஹரிவம்சத்தின் ஓர் அத்தியாயத்தை மொழிபெயர்த்தார். அது இந்தப் புத்தகத்தின் 21ம் அத்தியாயமாக வருகிறது. 29ம் அத்தியாயத்தில் வரும் காசி மன்னர்களின் வரலாறு, 30ம் அத்தியாயத்தில் யயாதியிடம் இருந்த தெய்வீகத் தேர் படிப்படியாக வம்சவாரியாக இறுதியில் ஜராசந்தனையும், அவனுக்குப் பிறகு கிருஷ்ணனையும் அடைந்தது என்ற குறிப்பு, 32ம் அத்தியாயத்தில் பாண்டியன், கேரளன் மற்றும் சோழன் ஆகியோர் துஷ்யந்தனின் குலவரிசையில் வந்த ஆக்ரீடனுக்குப் பிறந்தவர்கள் என்ற குறிப்பு, 38ம் அத்தியாயத்தில் வரும் சியமந்தக மணி வரலாறு, 39ம் அத்தியாயத்தில் பாண்டவர்களின் அரக்கு மாளிகை எரிந்த அதே சமயத்தில் ஸத்யபாமாவின் தந்தை ஸத்ராஜித் கொல்லப்படுவதும், அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கான நீர்க்கடனைச் செலுத்த வாரணாவதம் சென்றிருந்த கிருஷ்ணனிடம் சென்று, ஈமச் சடங்குகள் முடிவடையும் முன்பே ஸத்யபாமா மீண்டும் அவனை துவாரகைக்கு அழைத்துவந்தாள் என்ற குறிப்பு, 42ம் அத்தியாயத்தில் விஷ்ணுவின் தசாவதாரம் வேறு வரிசையில் சொல்லப்படுவது. மேலும் இதே அத்தியாயத்தில் விஷ்ணு ஸ்துதி பாடம் என்ற துதி, 53ம் அத்தியாயத்தில் மஹாபாரதத்தில் முற்பிறவியில் மஹாபிஷக் என்ற மன்னனாக சொல்லப்படும் சந்தனு அதற்கும் முற்பிறவியில் பெருங்கடலின் அவதாரமாவான் எனசொல்லப்படுவது போன்ற செய்திகள் புராண இதிகாச ஆய்வாளர்களுக்குப் புதிய திறப்புகளை அளிக்கும் செய்திகளாகும்.
ஹரிவம்சம் (அ) அரிவம்சம் என்றழைக்கப்படும் இந்தத் தமிழ் பதிப்பு, 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மன்மதநாததத்தரின் பதிப்பைக் கொண்டு செய்யப்படுகிறது. இதில் மொத்தம் 12,494 ஸ்லோகங்கள் இருக்கும். எனவே, மஹாபாரதத்தில் சூதர் சொல்லியிருக்கும் எண்ணிக்கைக்கு நெருக்கமான ஸ்லோகங்களும் இதில் இருக்கும். மற்ற பதிப்புகள் அனைத்திலும் ஹரிவம்சம் மூன்று பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கையில், மன்மதநாததத்தரின் பதிப்பு இரண்டு பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பொதுவாக வழங்கி வரும் வழக்கத்திற்கு ஏற்ற வகையில் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் அமையும் ஹரிவம்சமும் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
முதல் பர்வமான ஹரிவம்சபர்வத்தில் மொத்தம் 3119 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது மொத்தம் 558 கிண்டில் பக்கங்களைக் கொண்டது.
ஹரிவம்சத்தின் இந்த முதல் பர்வத்தை கிண்டில் மின்நூலாக விலைக்கு வாங்க https://bit.ly/hv1-harivamsha-parva என்ற சுட்டிக்குச் செல்லவும்