Friday 19 March 2021

ஹரிவம்சம் 2 - விஷ்ணுபர்வம் - கிண்டில் மின்நூல்

ஹரிவம்சம் (அரிவம்சம்) 2 - விஷ்ணு பர்வம் முகப்பு அட்டை


ஹரிவம்சம் இரண்டாவது பர்வமான விஷ்ணு பர்வம் கிண்டில் நூல்

பக்கங்கள்: 1143 கிண்டில் பக்கங்கள்

விலை: ₹ 400.00

விலைக்கு வாங்க: https://bit.ly/hv2-vishnu-parva என்ற சுட்டிக்குச் செல்லவும்


ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும் (கிலா பர்வமாகும்). 

மஹாபாரதத்தில் கிருஷ்ணன் திரௌபதியின் சுயம்வர நேரத்தில் இளைஞனாக நமக்கு அறிமுகமாகிறான். அவனது குழந்தைப் பருவம் முதல், முதுமைப் பரும் வரையுள்ள செய்திகளை ஹரிவம்சமே தருகிறது. இந்தச் செய்திகளை அறிய பாகவதத்தையும், விஷ்ணு புராணத்தையும் நாடலாமே என்பவர்களுக்கு, அவற்றை விட ஹரிவம்சமே காலத்தால் மிக முந்தையது என்பதும், மஹாபாரதத்தைச் சொன்ன அதே வைசம்பாயனரே ஹரிவம்சத்தையும் உரைப்பவர் என்பதும் நிச்சயம் நிறைவைத் தரும். ஹரிவம்சத்தை அறியாமல், மஹாபாரதத்தின் பெரும்பகுதிகளை நுணுக்கமாகப் புரிந்து கொள்ள இயலாது என்பதே இதன் முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கிறது.

மஹாபாரதத்தைப் போலவே ஹரிவம்சத்திலும், வரலாற்றையும், மீமானிடத்தன்மையுடன் அமைக்கப்பட்ட பகுதிகளையும் தெள்ளெனப் பகுத்துவிட முடியும். உலக மாந்தர் பெரும்பான்மையோரின் உள்ளங்கவர் கள்வனை வரலாற்று மாந்தனாகக் காண விரும்புவோருக்கும், தெய்வீகனாக உணர விரும்புவோருக்கும் ஹரிவம்சம் கிடைத்தற்கரிய கருவூலமாகும். குறிப்பாக ஹரிவம்சத்தின் இரண்டவாது பர்வமான இந்த விஷ்ணுபர்வம் அந்தத் தாமரைக் கண்ணனின் வரலாற்றையும், குறியீடுகளாகத் திகழும் தொல் படிமங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சென்ற வருடம் வைகாசி விசாகத்தன்று (04.06.2020) விஷ்ணு பர்வம் தொடங்கப்பட்டது. சிவராத்ரி (11.03.2021) அன்று நிறைவடைந்தது. மொத்தம் 131 அத்யாயங்களை நிறைவு செய்ய 282 நாட்கள் ஆகியிருக்கின்றன. தமிழில் இந்த 131 அத்யாயங்களை மொழிபெயர்ப்பதற்காக, சம்ஸ்கிருதத்தில் இருந்து 128 அத்யாயங்களைத் தமிழுக்கு ஒலிபெயர்த்து, ஆங்கிலத்தில் 131 அத்யாயங்களை ஒளிவழியில் எழுத்துருக்களை அறிந்து, பிழைதிருத்தி தனித்தனி அத்யாயங்களாகப் பதிவிட வேண்டியிருந்தது. இதன் காரணத்தை முந்தைய "ஹரிவம்ச பர்வம் - சுவடுகளைத் தேடி" பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

ஹரிவம்சத்தில் இரண்டாவது பர்வமான இந்த விஷ்ணுபர்வத்தில் மொத்தம் 7787 ஸ்லோகங்கள் இருக்கின்றன.  இது மொத்தம் 1143 கிண்டில் பக்கங்களைக் கொண்டது.

ஹரிவம்சத்தின் இரண்டாம் பர்வமான விஷ்ணுபர்வத்தை கிண்டில் மின்நூலாக விலைக்கு வாங்க https://bit.ly/hv2-vishnu-parva என்ற சுட்டிக்குச் செல்லவும்

***

ஹரிவம்சத்தின் - முதல் பர்வமான ஹரிவம்ச பர்வத்தை கிண்டில் நூலாக வாங்க: https://bit.ly/hv1-harivamsha-parva

பக்கங்கள்: 558 கிண்டில் பக்கங்கள்

விலை: ₹ 280.00

***